செய்திகள் :

AI வீடியோக்களுக்கு எதிராக நாகார்ஜுனா வழக்கு: "உரிமைகளைப் பாதுகாக்கணும்" - நீதிமன்றம் சொல்வது என்ன?

post image

AI உலகில் தனி மனிதர்களின் தனியுரிமை கேள்விக்குறியாகியிருக்கிறது. போலியாக உருவாக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் பல துயரங்களுக்கும் காரணமாகியிருக்கிறது.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி தேஜாஸ் காரியா அமர்வில் நடந்தது. அப்போது நாகார்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், ``நடிகரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட AI பரப்பப்பட்டு பணமாக்கப்படுகிறது.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

AI மாடல்களைப் பயிற்றுவிக்கக் கூட நடிகர் நாகர்ஜுனாவின் குரல், அடையாளம், படங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த AI வீடியோ உள்ளடக்கத்தை YouTube இன் கொள்கையின்படி AI மாடல்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தலாம் என்பதுதான்.

இதுபோன்ற AI வீடியோக்கள் உண்மையில் சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு உதவுகின்றன.

நடிகரின் 95 படங்கள், இரண்டு தேசிய விருதுகள், லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நடிகரின் ஆளுமை தவறான நடவடிக்கைக்குப் பயன்படலாம்" என்பதைக் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு பேசிய நீதிபதி தேஜாஸ் காரியா, ``ஜெனரேட்டிவ் AI -யால் வேகமாக வளர்ந்து வரும் அபாயங்களை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

குறிப்பாக பிரபலங்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் படங்கள், குரல், ஆளுமை பயன்படுத்தப்படும்போது அது பெரும் ஆபத்தை உருவாக்கும்.

ஒருவேளை தவறான நடத்தையுடன் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டாலும், அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.

இது உண்மையா அல்லது AI என்பதே சாமானியர்களுக்குப் புரிய காலமாகும். எனவே, நாகார்ஜுனாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள URLகளை உடனடியாக நீக்க வேண்டும்.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

அவரது பெயர், உருவம் மற்றும் குரலை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதற்கு எதிராக அவரது ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்" என உத்தரவிட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ``இந்த டிஜிட்டல் உலகில் எனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி.

இந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

They Call Him OG Review: பவனும் பவன் நிமித்தமும் - படம் எப்படி ?

1940களில் ஜப்பான் நாட்டின்டோக்யோநகரில் தொடங்குகிறது கதை. அங்குள்ள சாமுராய்களுக்கும்இன்னொரு கேங்ஸ்டர்களுக்குமிடையேநடந்த சண்டையில் ஒரு இளைஞன் (பவன் கல்யாண்) மட்டும் தப்பித்து கப்பலில் செல்கிறான். அந்தக்... மேலும் பார்க்க

They Call Him OG: ``பெண்களை முன்னிலைப்படுத்துவதில் பவன் கல்யாண் ஒரு முன்னோடி" - நடிகை ஸ்ரீயா ரெட்டி

பவன் கல்யாணின் `They Call Him OG' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீயா ரெட்டி எனப் பலரும் இப்படத்தின் முக்க... மேலும் பார்க்க

Adhira: `இது PVCU'; டோலிவுட்டின் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் - அசுரனாக எஸ்.ஜே சூர்யா!

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் `ஹனுமான்' திரைப்படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்து பெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புராணங்களை அடிப்படையாக வைத்து ஒ... மேலும் பார்க்க

OG: மேடையிலேயே வாளை சுழற்றிய பவன் கல்யாண்; சில நொடிகளில் சுதாரித்த பவுண்ஸர்! - வைரல் வீடியோ

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தராததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நட... மேலும் பார்க்க

OG: ரூ.1,29,999-க்கு விற்கப்பட்ட ஒரு டிக்கெட்; பவன் கல்யாண் ரசிகரின் 'அதிர்ச்சி' சம்பவம்

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் `ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் பவன் கல்யாணின், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்... மேலும் பார்க்க