செய்திகள் :

Ajith: `தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும்.!' - பாராட்டிய பார்த்திபன்; நன்றி தெரிவித்த அஜித்

post image

நடிகர் அஜித் ஸ்பெயினில் தன்ன சந்தித்த ரசிகர்கள் விசிலடித்தபோது, நடிகர் அஜித் தன் பார்வையாலும், சைகையாலும் அதைக் கண்டித்தார்.

அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தன் சமூக ஊடகப்பக்கத்தில் ``decision ma’KING’ Ajith தான் ! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும்.

பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர்.

தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர்.

ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர் எனக்கும்!" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித் குமார், ``அன்புள்ள பார்த்திபன் சார், உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் அஜித் குமாரின் பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நடிகர் பார்த்திபன்,`` ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல், ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!

அப்படி நேற்று முன்தினம் நடிகர் அஜித்குமார் பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன்.

நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார்

ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது. எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு, சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன். அது இப்படி வெளியே வந்து விட்டது" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Pooja Hegde:``Diwali is hereeee" - நடிகை பூஜா ஹெக்டேவின் வைரல் கிளிக்ஸ் | Photo Album

Pooja Hegde: ``எல்லை மீறி விமர்சனங்கள்; பணம் கொடுத்தால் அகற்றுவோம் என்கிறார்கள்!'' - பூஜா ஹெக்டே மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: `ஏ, தள்ளு, தள்ளு' - நடுரோட்டில் இறங்கி தள்ளிய பயணிகள்; வைரலான அரசு பேருந்து

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மல்லி வழியாக திருத்தங்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பழுதாகி பாதி வ... மேலும் பார்க்க

ஜப்பான்: 2 வருடமாக பணம் கொடுக்காமல் சாப்பிட்ட இளைஞர்; உணவு டெலிவரி நிறுவனத்திடம் சிக்கியது எப்படி?

ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், உணவு டெலிவரி செயலியை ஏமாற்றி 2 ஆண்டுகளில் 1,095 ஆர்டர்கள், கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுகளை இலவசமாகச் சாப்பிட்டிருக்கிறார். ஜப்பானில் நாகோயா என்ற பகுதியில் வசிக்... மேலும் பார்க்க

தென்காசி: 2 நாளில் 27 நபர்களைக் கடித்துக் குதறிய தெருநாய்கள்; பதறவைக்கும் CCTV காட்சிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்திக் கடிப்பத... மேலும் பார்க்க

80's நடிகர்களின் சந்திப்பு: `அப்சரா ஆலி' - வைரலாகும் நடிகை நதியாவின் நடன வீடியோ | Viral Video

தென்னிந்திய சினிமா நடிகர்கள் ஒவ்வோர் ஆண்டும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அதுபோன்றதொரு சந்திப்பு சமீபத்தில் நடந்தது. 1980-களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, இந்தி திரைப்படத் துறையில... மேலும் பார்க்க

`29 ஸ்பூன், 19 டூத் பிரஷ்' - போதை ஆசாமியின் வயிற்றில் ஆபரேஷன் செய்து எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாபூரைச் சேர்ந்தவர் சச்சின். 35 வயதான இவர் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சச்சினுக்கு கடந்த சில தினங்களாக வயிற்றுவலி வந்திருக்கிறது. இதனால் ச... மேலும் பார்க்க