செய்திகள் :

Allu Arjun: `பாதிக்கப்பட்ட சிறுவன்; சட்ட நடவடிக்கைகள் காரணமாக..!' - ஜாமீனுக்குப் பிறகு அல்லு அர்ஜூன்

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் ஸ்ரீ தேஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதை எதிர்த்து, அல்லு அர்ஜூன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத் காவல்துறை, நடிகர் அல்லு அர்ஜுனை வெள்ளிக்கிழமை கைது செய்து, கீழ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி அவரை விடுவித்தது.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவன் ஸ்ரீ தேஜ் பற்றி ஆழ்ந்த கவலையில் இருக்கிறேன். நடந்துகொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் அவரையும், அவரின் குடும்பத்தாரையும் என் பிரார்த்தனையில் நினைவுகொள்கிறேன். அவரின் மருத்துவ செலவு உள்ளிட்ட அவரின் குடும்பத் தேவைகளுக்கு பொருப்பெறக்கிறேன். சிறுவன் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விரைவில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Allu Arjun: `கவலைப்பட ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன்' - ஜாமீனுக்கு பிறகு பேசிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரச... மேலும் பார்க்க

Allu Arjun Stampede Case : ரசிகை உயிரிழந்த வழக்கு; சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அல்லு அர்ஜுன்

சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்திருக்கிறார்.'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்... மேலும் பார்க்க

Allu Arjun : அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்; 'இப்படியா கைது செய்வது?' - நீதிமன்றம் சொல்வதென்ன?

'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் ... மேலும் பார்க்க

Allu Arjun: `மீண்டும் மீண்டும்!'- இந்தாண்டில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் சிக்கிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜூன் மீது இந்தாண்டு மட்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி `புஷ்பா 2' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்ல, வெளியான குறுகி... மேலும் பார்க்க

`அதிகாரிகள் சினிமாக்காரர் மீது காட்டும் ஆர்வத்தை..!' - Allu Arjun-க்கு நானி, ஜெகன் மோகன் ஆதரவு

அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பு மற்றும் சுகுமாரின் இயக்கத்தில் உருவான `புஷ்பா 2' திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியான அன்று ஹைதராபாத்த... மேலும் பார்க்க

Allu Arjun: `ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்றுதான் ஆனால்...’ - அல்லு அர்ஜுன் பற்றி ராஷ்மிகா

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உய... மேலும் பார்க்க