செய்திகள் :

Allu Arjun Stampede case: "அல்லு அர்ஜுன் மீதான வழக்கை வாபஸ் வாங்க தயார்" - உயிரிழந்த பெண்ணின் கணவர்

post image
'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கத் தொடரப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் டிச.4-ல் குவிந்தனர். இதனால் அங்குப் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் அந்தத் திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால் ரசிகர்கள் கூட்டம் இன்னும் ஆக்ரோஷமானது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்தார். அவரது மகன்(9) தற்போது கவலைக்கிடமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

உயிரிழந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் பணமும், சிகிச்சைப் பெற்று வரும் 9 வயது சிறுவரின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அல்லு அர்ஜுன்

இந்தச் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்தாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. மேலும், ரேவதி (39) உயிரிழந்தது தொடர்பாகவும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, இன்று காலை காவல்துறையினர் நடிகர் அல்லு அர்ஜுனை, அவரது வீட்டிலிருந்து கைது செய்து ஹைதராபாத், சிக்கடப்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். இதுதொடர்பாக வீட்டிலிருந்தபடி அவரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காணொலி வெளியாகி இருந்தது.

இந்த வழக்கு விசாரனையில் தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

மற்றொரு புறம், திரையரங்கத்தினர் முன்கூட்டியே விஐபிக்கள், பிரபலங்கள் திரையரங்கிற்கு வருவதாக காவல்துறையிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறுகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பாஸ்கர்

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் ரசிகர்கள் கூட்ட நெரிசலால் மனைவியை (ரேவதி) இழந்த பாஸ்கர், நடிகர் அல்லு அர்ஜுன் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகப் பரபரப்பாகப் பேட்டியளித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் பாஸ்கர், "என் மகன் விருப்பப்பட்டதால்தான் 'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க குடும்பத்துடன் சென்றோம். அது எங்கள் தவறுதான். ரசிகர்களின் கூட்ட நெரிசலால் என் மனைவி உயிரிழந்தார். என் மகன் சிகிச்சைப் பெற்று வருகிறான். எதிர்பாராமல் நடந்த இந்த அசாம்பாவிதத்திற்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை கைது செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காவல்துறை என்னிடம் இதுபற்றித் தெரிவிக்கவில்லை. நான் அல்லு அர்ஜுன் மீதான வழக்கை வாபஸ் வாங்கத் தயாராக இருக்கிறேன்." என்று பரபரப்பாகப் பேட்டியளித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Allu Arjun : அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்; 'இப்படியா கைது செய்வது?' - நீதிமன்றம் சொல்வதென்ன?

'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் ... மேலும் பார்க்க

Allu Arjun: `மீண்டும் மீண்டும்!'- இந்தாண்டில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் சிக்கிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜூன் மீது இந்தாண்டு மட்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி `புஷ்பா 2' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்ல, வெளியான குறுகி... மேலும் பார்க்க

`அதிகாரிகள் சினிமாக்காரர் மீது காட்டும் ஆர்வத்தை..!' - Allu Arjun-க்கு நானி, ஜெகன் மோகன் ஆதரவு

அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பு மற்றும் சுகுமாரின் இயக்கத்தில் உருவான `புஷ்பா 2' திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியான அன்று ஹைதராபாத்த... மேலும் பார்க்க

Allu Arjun: `ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்றுதான் ஆனால்...’ - அல்லு அர்ஜுன் பற்றி ராஷ்மிகா

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உய... மேலும் பார்க்க

Allu Arjun: ரசிகர் உயிரிழந்த விவகாரம்; அல்லு அர்ஜுன் கைதா? காவல் நிலையம் கூட்டிச் சென்ற போலீஸ்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியான அன்று, ஹைதராபாத்திலுள்ள சந்தியா ... மேலும் பார்க்க

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; மூத்த தெலுங்கு நடிகருக்கு தொடரும் சிக்கல் - கொலை வழக்கு பதிந்த போலீஸ்!

தெலுங்கு திரையுலகின்பழம்பெரும்நடிகர்மஞ்சு மோகன் பாபு. இவருக்கும், இவரின் மகன் மனோஜ் மஞ்சு - மருமகள் மோனிகாவுக்குமிடையே சொத்து தகராறு தொடர்பாக பிரச்னை நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் மஞ்சு மோகன், தன... மேலும் பார்க்க