செய்திகள் :

Amaran: “அந்த வசனத்தை விஜய் சார்தான் சேர்த்தார்”- சிவகார்த்திகேயன்

post image
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில், ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'அமரன்'.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அமரன் படம் குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கும் நேர்காணல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். அந்தவகையில் 'கோட்' படத்தில் கேமியோ ரோலில் நடித்தது குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அமரன்

“கோட் படத்தில் ஒரு கேமியோ இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறினார். படப்பிடிப்பு நடக்க துவங்கியபோதே அதை சொல்லியிருந்தார். ஆனால் என்ன சீன் என்றெல்லாம் சொல்லவில்லை. இருவருக்கும் இருக்கும் காட்சிக்கான பேப்பரைப் பார்த்து விஜய் சாரும் மகிழ்ந்திருக்கிறார். கடைசியாக, ஷூட்டிற்கு முந்தய நாள்தான் வெங்கட் பிரபு சீன் பேப்பரை அனுப்பினார்.

அன்றைய தினம் காலையில் ஷூட்டிங் சென்றபோது, ’துப்பாக்கியை கொடுத்து வில்லன் மேனனை பார்த்துக்கோங்க. சுடக்கூடாது’ என்பதுதான் சீன் பேப்பரில் இருந்தது. ஆனால், விஜய் சார்தான் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வசனத்தை சேர்த்துப் பேசினார். அது அவரது பெருந்தன்மை. சிலர் சினிமா பொறுப்பை ஒப்படைத்துவிட்டதாக பேசுகின்றனர். நான் அப்படி பார்க்கவில்லை.

சிவகார்த்திகேயன்

அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன். விஜய் அவார்ட்ஸில் அவரிடம் இருந்தே ஒருமுறை நான் விருது வாங்கினேன். கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவருடன் ஸ்கிரீன் ஷேர் செய்தேன். இது இரண்டையுமே அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன்" என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

சிலம்பாட்டம் ரீரிலீஸ்: விஜய்யும், அஜித்தும் ஓகே செய்த கதையில் சிம்பு! - ரகசியம் சொல்லும் இயக்குநர்

சிலம்பரசனுக்கு சினிமாவில் இது 40-வது ஆண்டு. அதாவது அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'உறவை காத்த கிளி' படம் வெளியாகி, 40 ஆண்டுகள் ஆகின்றன. இதை கொண்டாடும் விதமாக அவர் நடித்த 'சிலம்பாட்டம்' படம் ரீரில... மேலும் பார்க்க

Amaran: ``நாமும் லிங்குசாமிகிட்ட நஷ்ட ஈடு கேட்கலாம் போலையே!'' ஃபன் செய்த வசந்த பாலன்!

`அமரன்' திரைப்படத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார் சென்னையை சேர்ந்த மாணவர் வாகீசன்.அமரன் படத்தின் ஒரு காட்சியில் சாய் பல்லவி ஒரு காகிதத்தில் அவரின் தொலைப்பேசி எண்ணை எழ... மேலும் பார்க்க

Amaran: ``எனக்கு பெரிய படங்கள் பண்ணனும்னு ஆசை..." - சிவகார்த்திகேயன்

'அமரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்திகேயனின் நேர்காணல் ஒன்றைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.அதில் பேசிய சிவகார்த்திகேயன், " 'அமரன்' படம் நல்ல வரவேற்பைப்பெற்று விட்டது. அடுத்து என்ன... மேலும் பார்க்க

``என் படம் ஓடாதப்போ அஜித் சார் எனக்கு சொன்ன விஷயம் இதுதான்" - மனம் திறந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில், ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'அமரன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவ... மேலும் பார்க்க

Amaran: `ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க' - படக்குழு மீது வழக்கு தொடர்ந்த சென்னை மாணவர்; காரணம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருந்தது அமரன்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து பலரின் பாராட்டுகளையும் அள்ளினார். இத்திரைப்பட... மேலும் பார்க்க

`குறைகளோடு கூடிய படைப்பு' `10 கோடி+ நிமிடங்கள்' கரு.பழனியப்பன் விமர்சனமும், சீனு ராமசாமியின் பதிலும்

சீனு ராமசாமியின் இயக்கத்தில், ஏகன், யோகிபாபு, சாகாய பிரிகிடா நடிப்பில் வெளியான திரைப்படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இப்படத்தை விமர்சித்து கரு.பழனியப்பன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டி... மேலும் பார்க்க