செய்திகள் :

Anshul: `ஒரே இன்னிங்ஸ், 10 விக்கெட்' - ரஞ்சியில் புதிய சாதனை; கவனம் ஈர்க்கும் முன்னாள் MI வீரர்

post image
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில், 23 வயது இளம் வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸின் மொத்த விக்கெட்டுகளையும் சாய்த்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அரிய சாதனையானது ரஞ்சி டிராபியில் மூன்றாவது முறையாக அரங்கேறியிருக்கிறது. இதற்கு முன்னர், 1956 - 57 ரஞ்சி டிராபியில் முதல்முறையாக அஸ்ஸாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் வீரர் பிரேமாங்சு சாட்டர்ஜி ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்தார். அதையடுத்து, 1985 - 86 டிராபியில் விதர்பா அணிக்கெதிரான ஆட்டத்தில் எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் பிரதீப் சுந்தரம் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

அதற்குப் பின்னர், 38 வருடங்களுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் முதல்முறையாக, கேரளா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்திருக்கிறார் ஹரியானா வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ். இன்னும் 10 நாள்களில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெறவிருக்கும் சூழலில், அன்ஷுல் கம்போஜ் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது ஐ.பி.எல் மொத்த அணிகளின் பார்வையையும் இவர் பக்கம் திருப்பியிருக்கிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 20 லட்சம் என்ற ஆரம்பத் தொகைக்கே எடுக்கப்பட்ட அன்ஷுல் கம்போஜ், மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணிக்காக விளையாடிய இவர் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில், இந்தியா பி-க்கு எதிரான ஆட்டத்தில் 8 வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ஷுல் கம்போஜ்

இதுமட்டுமல்லாது, 2023-24 விஜய் ஹசாரே தொடரில் ஹரியானா முதல்முறையாக சாம்பியனானதில் முக்கிய பங்காற்றிய அன்ஷுல் கம்போஜ், 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த ஆண்டு முழுவதும் தன்னுடைய சிறப்பான ஆட்டங்களால் இந்திய அணியின் கதவைத் தட்டியிருக்கும் அன்ஷுல் கம்போஜ், ஐ.பி.எல் ஏலத்தில் நிச்சயம் கவனம் ஈர்ப்பார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Tim Southee : 'விடை பெறுகிறேன்!' - ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

நியூசிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிம் சௌத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... மேலும் பார்க்க

CT 25: இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்வதில் நீடிக்கும் குழப்பமும்... ஷாகித் அஃப்ரிடியின் விருப்பமும்!

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. இதில், பாதுகாப்பு காரணங்களால் 2008-க்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைத் தவிர்த்துவரும் இந்திய அணி, இதே கா... மேலும் பார்க்க

Mohammed Shami: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்... கம்பேக் மோடில் ஷமி!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றதில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது ஷமி. வெறும் ஏழு போட்டிகளில் மட... மேலும் பார்க்க

SAvsIND: சதமடித்த திலக் வர்மா; நெருங்கி வந்து தோற்ற தென்னாப்பிரிக்கா! - இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்திருந்தது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.இந்தி... மேலும் பார்க்க

Sanju Samson: `சஞ்சுவின் 10 வருட கரியரை சீரழித்ததே இந்த 3 கேப்டன்கள்தான்' - தந்தை குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்ப... மேலும் பார்க்க

SAvIND: `மைதானத்தை சூழ்ந்த பூச்சிகள்'- விநோத காரணத்தால் தடைபட்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்து வரும் மூன்றாவது டி20 போட்டியில் திடீரென பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததால் போட்டி இடையிலேயே கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.SA v Indஇந்திய அணி தென்னாப்பிரிக... மேலும் பார்க்க