செய்திகள் :

Apollo: உலக அவசர மருத்துவ தினம்; 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அப்போலோ

post image

சென்னை அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals], [World Emergency Medicine Day] கொண்டாடும் வகையில், 'ஃப்ளீட் ஆஃப் ஹோப்' [Fleet of Hope] என்ற மாபெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. உயிர்களைக் காப்பாற்றுவதிலும், அவசர சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் 1066 அவசர ஆம்புலன்ஸ் சேவைகளின் (1066 Emergency Services] முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம் தங்களது அன்புக்குரியவர்களுக்கு அவசர மருத்துவ சிசிச்சை தேவைப்படும் தருணங்களில் அவர்களை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்வதற்கு தங்களது வாகனங்களில் செல்வதை விட, பொதுமக்கள் 1066 என்ற அவசர தொடர்பு எண்ணுக்கு அழைப்பதை அப்போலோ மருத்துவமனைகள் வலியுறுத்துகிறது.

"உங்கள் வீட்டு வாசலிலேயே அவசர மருத்துவ சிகிச்சையைத் தொடங்க முடியும் என்னும் போது, நீங்கள் பதட்டத்துடன் ஏன் வாகனம் ஓட்ட வேண்டும்?" என்ற விழிப்புணர்வை உருவாக்குவதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். ஆம்புலன்ஸ் என்பது அவசர சிகிச்சை தேவைப்படும் ஒருவரை அழைத்துச் செல்லும் ஒரு போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல நோயாளியின் வீட்டு வாசலுக்கு வந்தவுடன். உடனடியாக மருத்துவச் சிகிச்சையைத் தொடங்கும் ஒரு சிகிச்சை நடைமுறையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பக்கவாதம், மாரடைப்பு அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில், மருத்துவ. உதவி இல்லாமல் தாமதம் ஏற்படுவது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் இதனால் ஆம்புலனஸ் சேவை என்பது உயிரைக் காக்க உதவும் சேவை என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை.கள் இந்த முன்முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

பொதுமக்களிடையே விழிப்புணாவை ஏற்படுத்தும் முன்முயற்சியாக, சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனை ஆம்புலனஸ் அணிவகுப்பான ஃப்ளீட் ஆஃப் ஹோப் (let of Hoped கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தை திரு. சொக்கையா, திருவல்லிக்கேணி உதவி ஆணையர் (போக்குவரத்து) அவர்கள் ஆம்புலன்ஸ்களுக்கு கொடியசைத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவமனைகளின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர் (Dr. Rohini Sridhar, Chief of Medical Services, Apollo Hospitals], ரோகிணி ஸ்ரீதர் மருத்துவமனைகளின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO-Chennal Region, Apollo Hospitals) மற்றும் அப்போலோ மருத்துவமனைகளின் தெற்கு மண்டல அவசர சிகிச்சைப் பிரிவுகளின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் தவபழனி ஏ (Dr. Dhavapalani A, Regional Clinical Director, Emergency Departments, Southern Region, Apollo Hospitals] ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் மருத்துவமனை பிரிவின் தலைவர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் (Dr. Rohini Sridhar, Chief of Medical Services-Hospital Division, Apollo Hospitals] கூறுகையில், "உலக அவசர மருத்துவ தினம், மருத்துவ அவசர நிலையில் நாம் ஒவ்வொரு நொடியும் மிக விரைவாகவும் அதே சமயம் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியமானது. இன்று, 'நம்பிக்கையின் அணிவகுப்பான' 'Fleet of Hope'-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது மருத்துவ நெருக்கடி ஏற்படும் தருணத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் ஒரு முக்கிய தருணம் உயிருக்கு ஆதரவு அளிக்கும் மேம்பட்ட லைஃப் சப்போர்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் மூலம். நோயாளியின் இருக்குமிடத்திற்கு வந்தடையும் தருணத்திலேயே அவசியமான மருத்துவ பராமரிப்பைத் தொடங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம் நோயாளியின் நிலை குறித்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதன் மூலம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மருத்துவமனையை சென்றடையும் நேரத்தில் மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இது கதிரியக்கவியல், கேத் லேப் மற்றும் இன்னும் பிற முக்கியமான பரிசோதனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ நடைமுறைகளை முன்கூட்டியே தயார்நிலையில் வைத்து செயல்படுத்தவும் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் குழுவிற்கு உதவுகிறது." என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் தெற்கு மண்டல அவசர சிகிச்சைப் பிரிவுகளின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் தவபழனி. ஏ (Dr. Dhavapalani A, Regional Clinical Director, Emergency Departments, Southern Region, Apollo Hospitals] கூறுகையில், "மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் வெறும் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்ல அவை எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் நடமாடும் பராமரிப்பு தளங்கள். மேம்பட்ட நோயறிதல் கருவிகள் மற்றும் மருத்துவர்களுடன் தங்கு தடையில்லா தகவல்தொடர்பு வசதிகள் மூலம் நோயாளி மருத்துவமனையை அடைவதற்கு முன்பே உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடங்க ஆம்புலன்ஸ்கள் உதவுகின்றன. நோயாளி எங்கிருந்தாலும், அவர்கள் எளிதில் பெறக்கூடிய, மருத்துவ சூழலுக்கேற்ற வகையில் சிகிச்சையை மேற்கொள்ளும், தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் அவசர மருத்து சேவையை நேரடியாக வழங்குவதே ஆம்புலன்ஸ்களின் நோக்கமாகும். இதன் மூலம் அவசரகால சிகிச்சையை மேம்பட்டதாக மறுவரையறை செய்வதே எங்கள் குறிக்கோள்." என்றார்.

சென்னை அப்போலோ மருத்துவமனை, அவசர மருத்துவ சிகிச்சைக்கான கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 1066 ஹெல்ப்லைன் மற்றும் அவசர அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் மிகப்பெரும் மொபைல் தொடர்பு நெட்வொர்க் மூலம், சரியான நேரத்தில், உயிர்காக்கும் பராமரிப்பை வழங்குவதில் அப்போலோ மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 73 மருத்துவமனைகள், 6000-க்கும் அதிகமான மருந்தகங்கள், 2500-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் டயக்னோஸ்டிக் மையங்கள், 500-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 200,000-க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு லட்சம் உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.

டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

கோவை, நீலகிரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மழைக்காலம் என்பதால் காட்டில் இருக்கும் பாம்பு, பூரான் என விஷ ஜந்துக்களெல்லாம் முன்னெச... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கொரோனா தொற்று; அச்சம் கொள்ள வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?

நமக்கு பெரிதும் அறிமுகம் தேவைப்படாத நோய் என்றால் அது கொரோனாதான். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளில் ஆரம்பித்து இறப்பு வரை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் தொற்று இது. எண்ணிலடங்காத உயிரிழப்புகளால் உலக ந... மேலும் பார்க்க

Health: வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா?

வைட்டமின் பி12 குறைபாடுப் பற்றிய விழிப்புணர்வு சமீப வருடங்களாகத்தான் அதிகரித்திருக்கிறது. உடலுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் ஒரு மைக்ரோ சத்து இந்த பி 12. பல உடல் உபாதைகளுக்கு ஆரம்பமாக விளங்குவது ... மேலும் பார்க்க

Apollo: 'மூட்டுப் பாதுகாப்புத் திட்டம்' அறிமுகப்படுத்திய அப்போலோ

அப்போலோ மருத்துவமனை (Apollo Hospitals) இன்று சென்னையில் அப்போலோ மூட்டுப் பாதுகாப்புத் திட்டம் (Apollo joint Preservation Program) என்ற மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் எலும... மேலும் பார்க்க

Doctor Vikatan: `பித்தப்பை கற்கள்' அறுவை சிகிச்சையைத் தவிர்க்க சித்த மருந்துகள் உதவுமா?

Doctor Vikatan: என் வயது 40. கடந்த சில வருடங்களாக பித்தப்பை கற்கள் பாடாய்ப் படுத்துகின்றன. ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டும்குணமாகவில்லை. மருத்துவர் பித்தப்பை கற்களை நீக்குவதுதான்தீர்வு எ... மேலும் பார்க்க

`CT ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வருமா? - பகீர் கிளப்பிய ஆய்வும் மருத்துவர் தரும் விளக்கமும்!

மருத்துவ உலகின் மகத்தான வளர்ச்சியில் ஒன்று CT ஸ்கேனிங் முறை. இது அறுவை சிகிச்சை ஏதும் செய்யாமலே மனித உடலின் உள் இருக்கும் பிரச்னையையும், அதன் தன்மையையும் கணினியில் திரைப்போட்டு காட்டிவிடும். இதனால் அற... மேலும் பார்க்க