செய்திகள் :

Ashwin: கோபம், நடுவரிடம் வாக்குவாதம்... அஷ்வினுக்கு அபராதம் விதித்த TNPL!

post image

கடந்த ஜூன் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இடையிலான TNPL போட்டியின்போது ரவிச்சந்திரன் அஷ்வினின் கொதிப்பான செய்கைக்கு அவரது போட்டி ஊதியத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற இந்த போட்டியின்போது அஷ்வின் சாய் கிஷோர் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனதாக நடுவர் கிருத்திகா அறிவித்தார். இந்த முடிவால் அதிருப்தி அடைந்தார் அஷ்வின்.

Ashwin
Ashwin

நடுவரிடம் களத்திலேயே பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியில் குத்தியதாக வாதாடினார் அஷ்வின். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு வைட் பால்களுக்கு ரிவியூக்களைப் பயன்படுத்தியிருந்ததால் அவரால் ரிவியூ எடுக்கவும் முடியவில்லை.

மைதானத்தில் இருந்து வெளியேறும்போது கோபத்தில் பேட்டால் பேடை அடிப்பது, கையுறைகளை கழற்றி எரிவது போன்ற செய்கைகளில் ஈடுபட்டார் அஷ்வின். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இது குறித்து TNPL அதிகாரி ஒருவர் பேசியதாக கிரிக்பஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், போட்டிக்குப் பிறகு நடுவருடன் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நடுவரிடம் கருத்து வேறுபாடு தெரிவித்து சண்டையிட்டதற்காக 10% மற்றும் உபகரணங்களைத் தவறாக பயன்படுத்தியதற்காக 20% என போட்டி வருவாயில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அஷ்வின் அபராதங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

போட்டியின் 5 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தபோது, 11 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்த அஷ்வின் அவுட் ஆனார். அதன் பிறகு 94 ரன்களில் அவரது அணி ஆல் அவுட் ஆனது. சேஸ் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி எளிதாக இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி |Photo Album

நெல்லை-TNPL-2025:திருச்சி கிராண்ட் சோழாஸ்அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றி! மேலும் பார்க்க

ENG vs IND: ராகுல், பண்ட் சென்சுரி; ஆனாலும் சொதப்பிய இந்தியா; ஜோஷ் டங் மேஜிக் | 1st Test Day 4

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது.அதேபோல், பவுலிங்கில் பும்ரா, ஜட... மேலும் பார்க்க

ENG vs IND: `ரெட்டைக் கதிரே...' - சதமடித்து இந்தியாவை மீட்ட Classy ராகுல், Beast பண்ட்!

இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது இந்தியா.அதேபோல், பவுலிங்க... மேலும் பார்க்க

'ரோஹித்தும், கோலியும் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் - சவுரவ் கங்குலி சொல்லும் காரணம் என்ன?

2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்... மேலும் பார்க்க

ENG vs IND: `கேட்ச் விட்டதுக்காக உட்கார்ந்து அழ முடியாது!' - பும்ரா பேசியது என்ன?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.ind vs engஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில... மேலும் பார்க்க

ENG vs IND: பண்ட் சாதனை சதம்; அபாரம் காட்டிய ஜோஷ் டங், போப்; சீறிய Boom Boom பும்ரா | 1st Test Day 2

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 20) தொடங்கியது.முதல் நாள் முடிவில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தால் 3 விக்கெட்... மேலும் பார்க்க