செய்திகள் :

AUS vs SA WTC Final: அபாரமாக பந்துவீசிய ரபாடா; ஸ்மித்தால் மீண்டெழுந்த ஆஸி! - Day 1ல் நடந்தது என்ன?

post image

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜாவும், மார்னஷ் லபுஷேனும் ஓப்பனிங் இறங்கினர்.

கம்மின்ஸ் - பவுமா
கம்மின்ஸ் - பவுமா

பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்த இந்த பிட்சில் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆத்திரேலியா பேட்ஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர்.

7-வது ஓவரில் கவாஜாவை 0 ரன்னில் விக்கெட் எடுத்த ககிஸோ ரபாடா, அதே ஓவரில் ஒன்டவுனில் களமிறங்கிய கேமரூன் கிரீனை பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டாக்கினார்.

ரபாடா - யான்சன் கூட்டணி அபாரம்!

இன்னொரு முனையில் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சன், லபுஷேனையும், ட்ராவிஸ் ஹெட்டையும் தூக்கினார்.

உணவு இடைவேளையின்போது 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது ஆஸ்திரேலியா.

அதன்பின்னர், ஒற்றை ஆளாக ஆஸ்திரேலியாவை கரை சேர்க்கப் போராடிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்துடன் கைகோர்த்தார் ஆல்ரவுண்டர் வெப்ஸ்டர்.

ஸ்மித்
ஸ்மித்

விக்கெட் சரிவைத் தடுத்த ஸ்மித்!

தனது அனுபவம் மூலம் தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு பிடிகொடுக்காமல் ஆடிக்கொண்டிருந்த ஸ்மித் வெற்றிகரமாக அரைசதமும் கடந்தார்.

ஸ்மித் - வெப்ஸ்டர் ஜோடியைப் பிரிக்க தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், கேப்டன் டெம்பா பவுமா, சற்று மாற்றி யோசித்து பார்ட் டைம் பவுலர் ஏய்டன் மார்க்ரமிடம் 42-வது ஓவரை வீசுமாறு பந்தைக் கொடுத்தார்.

Cool வெப்ஸ்டர்!

அதற்கு கைமேல் பலனாக, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்மித். அவரைத்தொடந்து களமிறங்கி குட்டி கேமியோ ஆடிய அலெக்ஸ் கேரி கேஷவ் மகாராஜ் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று 23 ரன்களில் போல்டானார்.

அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸை 1 ரன்னில் வெளியேற்றினார் ரபாடா. விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்த இந்த நேரத்தில் வெப்ஸ்டர் பதட்டமில்லாமல் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார்.

வெப்ஸ்டர்
வெப்ஸ்டர்

சுருண்ட ஆஸ்திரேலியா!

வெப்ஸ்டர் சதமடிப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ரபாடா அவரை அவுட்டாக்க, அடுத்தடுத்த ஓவர்களில் நாதன் லயனை மார்கோ யான்சனும், மிட்செல் ஸ்டார்க்கை ரபாடாவும் விக்கெட் எடுக்க 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும், ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

ரபாடா - யான்சன்
ரபாடா - யான்சன்

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளும், யான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதையடுத்து, இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எய்டன் மார்க்ரமும், ரியான் ரிக்கிள்டனும் தென்னாப்பிரிக்க அணியில் ஓப்பனிங் இறங்கினர்.

ஸ்டார்க் - கம்மின்ஸ் - ஹேசில்வுட் ட்ரியோவிடம் திணறும் தென்னாபிரிக்கா!

பிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதைப் புரிந்துகொண்ட மிட்செல் ஸ்டார்க், முதல் ஓவரிலேயே எய்டன் மார்க்ரமை போல்டாக்கினார்.

அந்த விக்கெட்டைத் தொடர்ந்து ஒன்டவுனில் களமிறங்கிய வியான் முல்டர் 5-வது ஓவரில் ஸ்டார்க்கின் பந்தில் எட்ஜ் ஆனார்.

ஆனால், எந்த எளிய கேட்சை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தவறவிட்டார். இருப்பினும், முல்டர் மிஸ்ஸானால் என்ன என்று ரிக்கிள்டனை அவுட்டாக்கினார் ஸ்டார்க்.

ஸ்டார்க்
ஸ்டார்க்

அதையடுத்து, கம்மின்ஸின் அற்புதமான இன்ஸ்விங் பந்தில் முல்டர் போல்டனார். அவரைத்தொடர்ந்து ஸ்டப்ஸும் ஹேசில்வுட்டின் ஓவரில் அதேபோன்ற இன்ஸ்விங் பந்தில் கிளீன் போல்டனார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 22 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

3 ரன்களுடன் பவுமாவும், 8 ரன்களுடன் டேவிட் பெடிங்கமும் களத்தில் நிற்க, ஆஸ்திரேலியாவை விட 169 ரன்கள் தென்னாப்பிரிக்கா பின்தங்கியிருக்கிறது.

ENG v IND: "3 அனுபவ வீரர்கள் இல்லை; இது நமக்கு அரிய வாய்ப்பு" - இந்திய வீரர்களுக்கு கம்பீர் உத்வேகம்

புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் படை ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.ரோஹித், கோலி, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிக... மேலும் பார்க்க

Kohli: "நான் அங்கு இருந்திருந்தால் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்" - யாரைச் சாடுகிறார் ரவி சாஸ்திரி?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் ஓய்வு முடிவு பலருக்கு... மேலும் பார்க்க

TNPL 2025: மதுரை பாந்தர்ஸ் அதிரடி ஆட்டம்... இந்த சீசனில் கோவைக்கு இரண்டாவது தோல்வி | Photo Album

மதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை... மேலும் பார்க்க

"எல்லா பந்துக்கும் பேட்டை சுழற்றுவதை நிறுத்துங்கள்; உங்களின் பலம்..." - பண்ட்டுக்கு கங்குலி அட்வைஸ்

இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் இடம்பெற்றிருக்கிறார்.ட... மேலும் பார்க்க

Kohli: "திருமணத்துக்குப் பிறகு கோலி முதிர்ச்சியடைந்திருக்கிறார்" - பாக்., முன்னாள் கேப்டன் புகழாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.அதையடுத்து, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே ச... மேலும் பார்க்க

Retired : 29 வயதில் ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான் - 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் 29 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்... மேலும் பார்க்க