Retired : 29 வயதில் ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான் - 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் 29 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் நல்ல ஃபார்மில் விளையாடிவரும் நிக்கோலஸ் பூரான், ஓய்வை அறிவிக்க நிதி சார்ந்த மற்றும் நெருக்கடி கொடுக்கப்படுவது உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 106 டி20 போட்டிகளில் விளையாடி, 2275 ரன்கள் எடுத்துள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் 1983 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது நடைபெறும் இங்கிலாந்து மற்றும் அடுத்து வரும் அயர்லாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நிக்கோலஸ் பூரான் மட்டுமல்ல, இந்த ஆண்டில் பல கிரிக்கெட் ஜாம்போவான்கள் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர்.
1. ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2. க்ளென் மேக்ஸ்வெல்
சமீபத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறித்த க்ளென் மேக்ஸ்வெல், டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

3. மார்கஸ் ஸ்டாய்னிஸ்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும், போட்டிகள் தொடங்கும் முன்னர் ஓய்வை அறிவித்தார். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
4. ஹென்ரிச் க்ளாசன்
33 வயதேயாகும் க்ளாசன் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். ஃப்ரான்சேஸ் கிர்க்கெட் மற்றும் குடும்ப பராமரிப்பில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

5. மார்டின் குப்தில்
நியூசிலாந்து வீரரான இவர், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை அவர் வைத்திருக்கிறார். இப்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
6. திமுத் கருணாரத்ன
இலங்கையின் துணிச்சல் மிக்க டெஸ்ட் வீரராக கருதப்பட்ட இவர் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
7. விருத்திமான் சஹா
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1353 ரன்கள் குவித்திருக்கிறார். 93 விக்கெட்கள் விக்கெட் கீப்பராக எடுத்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் ஓய்வை அறிவித்தார்.
8. ரோஹித் சர்மா
ஏர்கெனவே டி20 போட்டிகளிலிருந்து ஒய்வை அறிவித்த ரோஹித் சர்மா, கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஒய்வை அறிவித்தார்.

9. விராட் கோலி
ரோஹித் ஓய்வை அறிவித்த சில நாட்களில் விராட்டும் ஓய்வு பெற்றார். இந்தியாவின் இங்கிலாந்து சீரிஸில் இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியாக அமைந்தது. ஒரு நாள் போட்டிகளில் இவர் தொடர்ந்து விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

10. பியூஷ் சாவ்லா
இந்திய அணியின் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக் கோப்பை அணிகளில் இடம்பெற்றிருந்த சாவ்லா இந்த ஆண்டு அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

11. நிக்கோலஸ் பூரான்
அதிரடி வீரரான பூரானின் ஒய்வு அறிவிப்பு கிர்க்கெட்டில் சர்வதேச போட்டிகளை விட ஃப்ரான்சைஸ் போட்டிகள் ஆதிக்கம் செலுத்துகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
