செய்திகள் :

Ahmedabad Plane Crash: `மகளைக் காண லண்டன் கிளம்பினார்'- விபத்தில் சிக்கி முன்னாள் முதல்வர் மரணம்

post image

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

முதலில், இதனை விபத்து என்று குறிப்பிடாமல் சம்பவம் என்று ட்வீட் செய்த ஏர் இந்தியா விமான நிறுவனம், அடுத்த ஒரு மணிநேரத்தில் தங்களது விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியது.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

அந்தப் பதிவில், "அகமதாபாத் டு லண்டன் செல்லும் AI171 விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு விபத்துக்குள்ளானது என்பதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்தப் பதிவில், 787-8 போயிங் ரக விமானம் சரியாக மதியம் 1:38 மணியளவில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், ஒரு கனேடியர் மற்றும் விமான ஊழியர்கள் என 242 பேருடன் புறப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த, 169 இந்தியர்களில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் (2016 - 2021) விஜய் ரூபானியும் ஒருவர். லண்டனிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக இந்த விமானத்தில் விஜய் ரூபானி புறப்பட்டிருந்தார்.

தற்போது, விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இருப்பினும், உயிரிழந்தோரின் அடையாளம் மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Ahmedabad Airplane Accident - Vijay Rupani
Ahmedabad Airplane Accident - Vijay Rupani

மறுபக்கம், இந்தியப் பிரதமர், இங்கிலாந்து பிரதமர் என அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துவிட்டார் என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மெஹ்சனாவில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பட்டீல், "முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். பாஜக குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறது.

இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் சாந்தியையும், அவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும் அமைதியையும் இறைவன் வழங்கட்டும்." என்று தெரிவித்தார்.

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க