செய்திகள் :

Attagasam: ``ஏமாற்றமளிக்கிறது; தல விரும்பிகளின் நலம் விரும்பியாக நான்..." - இயக்குநர் சரண்

post image

இயக்குநர் சரண் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `அட்டகாசம்'.

அஜித், பூஜா, ரமேஷ் கண்ணா எனப் பலரும் இணைந்து நடித்திருந்த இத்திரைப்படம் 2004-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி பெரும் கொண்டாட்டமாக அமைந்திருந்தது.

Attagasam Re Release
Attagasam Re Release

`அட்டகாசம்' திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி வருகிற அக்டோபர் 31-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

ரீ-ரிலீஸையொட்டி படத்திற்கு புதிய டிரெய்லர் ஒன்றை கட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த டிரெய்லரை இயக்குநர் சரணும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த டிரெய்லர் தன்னை ஏமாற்றமளிப்பதாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், ``தயாரிப்பாளர்களே! இந்த டிரெய்லர் எனக்கு ஏமாற்றமளிக்கிறது.

என்னிடம் இந்தப் பணியை ஒப்படைத்திருந்தால் தல விரும்பிகளின் நலவிரும்பியாக செயல்பட்டு டிரெய்லரை சூடேற்றியிருப்பேன்.

ஃபேன் மேட் டிரெய்லர்களே எத்தனை தரமாக இருக்கின்றன? Anyway All the best" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து வெளியான படத்தின் புதிய டிரெய்லரை யூட்யூபிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

`நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்'- பிரதீப்பின் பழைய ட்வீட்டுக்கு`டியூட்' தயாரிப்பு நிறுவனத்தின் பதில்

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்' திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. `லவ் டுடே', `டிராகன்' படங்களைத் தொடர்ந்து இப்படமும் 100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் தன... மேலும் பார்க்க

Idly Kadai BTS: ``சாணம் படிந்த கையோடு தேசிய விருது..." - நித்யா மெனேன் நெகிழ்ச்சி

நடிகை நித்யா மெனன் நடித்திருந்த `இட்லி கடை' திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பக... மேலும் பார்க்க

``ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்னு விமர்சனம் பண்ணாங்க" - பா. ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் 'பைசன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து நேற்றைய தினம் படத்தின் சக்சஸ் மீட் சென்னையி... மேலும் பார்க்க

``உங்களுக்கும் மணி சாருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன்" - சுதா கொங்கராவின் பதிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் `பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. பொங்கல் வெளியீட்டிற்காக படத்தின் வேலைகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.சுதா கொங்கராஇந்நிலையில், நீண்ட ... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ் செய்யும் 'இந்த' விஷயம் சாதாரணமானது அல்ல; எனக்கு ஆச்சரியமாக உள்ளது - பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படத்தின்‌ வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது.இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், "நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன், என்னுடைய வாழ... மேலும் பார்க்க