செய்திகள் :

Autograph: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சேரன் பட டிரெய்லர்... சமூக வலைதளங்களில் வைரல்!

post image
பள்ளிப் பருவம், காதல் என நினைவுகளால் நிரப்பி எடுக்கப்பட்ட இயக்குநர் பிரேம்குமாரின் 96 படத்துக்கு முன்னோடி, இயக்குநர் சேரன் இயக்கி நடித்த `ஆட்டோகிராஃப்' திரைப்படம்.

`ஞாபகம் வருதே' என நினைவுகளைத் தூண்டும் பாடல், மலையாளப் பெண்ணாக வரும் கோபிகாவுடனான சேரனின் காதல் முறிவு, இந்த சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்று திரும்பிப் பார்க்க வைத்த சினேகா - சேரன் நட்பு என இந்தப் படம், அந்த சமயத்தில் அனைவரையும் ரசிக்க வைத்தது.

ஆட்டோகிராப்

3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை ஆட்டோகிராப் வாரிக் குவித்தது. இவ்வாறிருக்க, ரீ ரிலீஸ் கலாசாரம் பிரபலமாகி வரும் இக்கால சூழலில், ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.

இந்த நிலையில், AI தொழில்நுட்பத்தால் ஜெனரேட் செய்யப்பட்ட `ஆட்டோகிராப்' திரைப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

FICCI : 'இருவரையும் இந்த விஷயத்தில் மன்னிக்க மாட்டேன்' - கமல், த்ரிஷா `Fireside Chat'

கலந்துகொண்ட 'ஃபயர்சைட் சாட்'கமல்ஹாசன், த்ரிஷாசென்னையில் இன்று மற்றும் நாளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, 'மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு' என்ற கருத்தரங்கை நடத்தி ... மேலும் பார்க்க

What to watch on Theatre: NEEK, Dragon, Get-Set Baby -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Dragon (தமிழ்)Dragonபிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, ... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை - உடல்நிலை குறித்து வழக்கறிஞர் அறிக்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு, மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வர... மேலும் பார்க்க

Shankar : இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை - நடவடிக்கையின் பின்னணி என்ன?

2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகி, அதிக வசூலையும் குவித்தப் படம் 'எந்திரன்'.இந்த 'எந்திரன்' திரைப... மேலும் பார்க்க

NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' - இயக்குநர் தனுஷ் நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 'ராயன்' படத்தை இயக்கியிருந்தார்.தனது இயக்கத்தில் மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி முடித்திருக்... மேலும் பார்க்க