செய்திகள் :

Baby & Baby: ``அஜித், விஜய்க்கு ஜோடியா நடிச்சவங்கதான் எனக்கும் ஜோடி..." -நடிகர் சத்யராஜ்!

post image

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் எனப் பலர் நடித்திருக்கும் பேபி & பேபி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தனா சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தனா

அது தொடர்பாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ``ரொம்ப நாளுக்கு அப்புறம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறேன். ஆரம்பத்துல ஜெய்க்கு அம்மா கேரக்டர்னு சொன்னாங்க. அப்புறம்தாம் சத்யராஜ் சார் கூட ஜோடிய நடிக்கனும்னு சொன்னாங்க. குழந்தைகள் பத்தி ரொம்ப அழகா படம் வந்திருக்கு. காட்சிகளை ரொம்பா அழகா எடுத்த கேமரா மேனுக்கு நன்றி. இந்தப் படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், ``எனக்கு இன்னிக்குதான் நடிகர் ஜெய் சிங்கிளா இருக்குறதே தெரிஞ்சது. இவ்வளவு நடிகர்களை ஒன்னு சேர்த்து வேலை வாங்குறது ரொம்பப் பெரிய விஷயம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். மதகஜராஜா, குடும்பஸ்தன் மாதிரியானப் படங்கள் வெற்றியடைந்ததைப் பார்க்கும்போது, ரத்தம், சண்டைனு பார்த்து சலித்த மக்கள், இந்தப் படங்கள் புதுவிதமா இருந்ததால வெற்றியடைய வச்சிருக்காங்க. அதுமாதிரியானப் படம்தான் பேபி & பேபி. அதனால நானும், ஜெய்யும் இந்தப் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

தயாரிப்பாளர் - இயக்குநருடன் சத்யராஜ்

இசை வள்ளல் இமான் இசையெல்லாம் சூப்பாரா இருக்கு. அஜித், விஜய்-க்கு ஜோடியா நடிச்சவங்கதான் இப்போ எனக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. அதனால நான் இன்னும் யூத்தாதன் இருக்கேனு நினைக்கிறேன். ஆனா, என் கூட நடிச்சதுக்கு அவங்க என்ன நினைக்கிறாங்கனுதான் தெரியல... இந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட் எப்போவும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இந்தப் படத்துல நடிச்சிருந்த அவ்வளவு பேரும் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். வெள்ளந்தியான, உஷாரான தயாரிப்பாளர்தான் யுவராஜ். இந்தப் படம் நிச்சியம் வெற்றிப்படமாக அமையும்." என்றார்.

Suriya: வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது?- `ரெட்ரோ'வின் அடுத்து அப்டேட்!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பரில் வெளியாகி, மிகுந்த வரவேற்பை அள்ளியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தடுத்த அப்டேட்களை... மேலும் பார்க்க

Baby & Baby: "சீக்கிரம் கமிட் ஆகுங்க சார்..." - மேடையில் வைத்து ஜெய்யைக் கலாய்த்த யோகி பாபு!

யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் பேபி & பேபி. அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்து... மேலும் பார்க்க

Baby & Baby: "'இசை வள்ளல்' டைட்டில் எனக்கே ஓவாராதான் இருக்கு; ஆனா..." - டி.இமான் பளீச்

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பேபி & பேபி. பிப்ரவரி 14-ம் தேதி ரீலீஸ் ஆகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு ... மேலும் பார்க்க

Samantha: சென்னை அணியை வாங்கிய சமந்தா; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக்க... மேலும் பார்க்க

STR 50: `நீங்க இல்லாம நான் இல்ல' - 50வது படத்தை தயாரிக்கும் சிம்பு - அடுத்தடுத்த அப்டேட்ஸ்

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படம் தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.சிம்பு நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு `பத்து தல' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தத... மேலும் பார்க்க

Vetrimaran: 'அரசியல் ஆகிடக்கூடாது...' - தவெக விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன்; பின்னணி என்ன?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாமாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர்... மேலும் பார்க்க