செய்திகள் :

Balti: 'செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது'- நடிகர் சாந்தனு

post image

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் 'பல்டி'.

வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் சாந்தனு, செல்வராகவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

'பல்டி'
'பல்டி'

இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்.18) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சாந்தனு, ``15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன்.

உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காகப் பரிந்துரை செய்திருக்கிறார்.

உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு ’பாவக்கதைகள்’, ’தங்கம்’ கிடைத்தது. திரையரங்கில் வெற்றியடைந்த படமாக ’ப்ளு ஸ்டார்’ அமைந்தது.

‘பல்டி’ 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம்.

ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது.

செல்வராகவன்
செல்வராகவன்

அவரிடம் அவருடைய படங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அல்போன்ஸ் சாரிடம் ’பிரேமம்’ பற்றி பேசினேன்.

அப்பா எப்போதும் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பார். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.

திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.

மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாள்களில் பேசி முடித்தேன். 3 நாள்களில் முடித்துவிட்டோம் என்று ஆச்சர்யமும் பட்டேன்.

ஆனால், மறுபடியும் கேரளாவிற்கு அழைத்து இந்த ஒரு காட்சிதான் என்று கூறி முழு வசனங்களையும் பேசவைத்தார் " என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Anupama: ``இறப்பதற்கு முன் நண்பர் அனுப்பிய அந்த மெசேஜ்; என் மனதின் ஆறாத காயம்" - அனுபமா பரமேஸ்வரன்

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் பிஸியாகியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் 'பைசன்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரை... மேலும் பார்க்க

Kiss: `வார்த்தைக்கு வாயில்லை' - வாழ்த்து தெரிவித்த இயக்குநர் நெல்சனுக்கு நடிகர் கவின் நன்றி!

சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.`லிஃப்ட்' படத்தில் தொட... மேலும் பார்க்க

"அடுத்த படம் தனுஷ் சார்கூட தான்; கதை சொல்லும்போது..."- 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசனின் அப்டேட்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'லப்பர் பந்து' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.இப்படத்தில்... மேலும் பார்க்க

'செல்வராகவன் சாரின் புதுப்பேட்டை படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன்'- மலையாள நடிகர் ஷேன் நிகாம்

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் 'பல்டி'. வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இ... மேலும் பார்க்க

Kiss Review: காமெடி காதல் கதையில் ஃபேண்டஸி மத்தாப்பு - இந்தப் புதுமை க்ளிக்காகிறதா?

காதல் என்றாலே வெறுப்பாகும் நெல்சனிடம் (கவின்) வந்து சேர்கிறது ஒரு பழங்கால புத்தகம். அதிலிருந்து யாரேனும் 'கிஸ்' அடிப்பதைப் பார்த்தால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பார்க்கும் திறனும் அவருக்... மேலும் பார்க்க