நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
Basics of Share Market 21: கான்டிராக்ட் நோட், ROI,... - இன்னும் சில பங்குச்சந்தை சொற்கள்!
கான்டிராக்ட் நோட்: ஒரு நாளில் பங்குசந்தையில் நாம் செய்திருக்கும் அனைத்து பரிவர்த்தனைகளின் தகவல்களும் கொண்டுள்ளதே கான்ட்ராக்ட் நோட். இது நாம் பங்குச்சந்தை ஆப்பில் கொடுத்திருக்கும் மெயில் ஐ.டிக்கு மெயிலாக பரிவர்த்தனைகள் நடந்த அதே நாளில் வந்துவிடும்.
ROI: Return on Investment என்பதன் சுருக்கமே ROI. நாம் முதலீடு செய்திருக்கும் தொகைக்கு வந்துள்ள வருமானம். குழப்பமாக இல்லாமல், எளிதாகச் சொல்லவேண்டுமானால், நம் முதலீட்டின் மீதான லாப சதவிகிதம். இதைக் கணக்கிட தனி ஃபார்முலா உண்டு.
Volume: குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் எத்தனை பரிவர்த்தனை ஆகியிருக்கிறது என்ற எண்ணிக்கையைக் குறிப்பதே Volume.
Bid: குறிப்பிட்ட பெரிய தொகையைக் கொடுத்து ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கத் தயாராக இருப்பது Bid.
Ask: 'நான் இந்த விலைக்கே இந்தப் பங்கை விற்கிறேன்' என்று குறைந்த விலையே பங்கின் முதலாளி கூறுவது Ask.
நாளை: 'Trend Analysis' பற்றி தெரிந்துகொள்வோமா?!