அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்
Basics of Share Market 34: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது எப்படி?
பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் வரும்போது நமக்குக் கலவையான மனநிலை இருக்கும். பங்கு விலை உயர்ந்தால், 'இன்னும் அதிகம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்' என்றும், பங்கு விலை குறைந்தால், 'இன்னும் கீழே இறங்கினால் என்ன செய்ய என மொத்தத்தையும் விற்றுவிடுவது' என்றும் இருப்போம்.
இந்த இரண்டு மனநிலையும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்லதல்ல.
பங்குச்சந்தை ஏற்றம், இறக்கம் என இரண்டும் பொதுவானவை தான். அதனால், அதில் மகிழ்ச்சி, பயம் என எதுவும் கொள்ள வேண்டாம். 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பதுப்போல, குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயித்து, அந்தத் தொகை வரும்வரை காத்திருங்கள்.
சந்தை எப்படி போகும், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சின்ன கணக்கைப் போட்டுப் பார்த்து வாங்குவதும், விற்பதும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், உங்களது கணிப்பு அனைத்து சமயங்களிலும் சரியாக இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது.
நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தால் இந்த மாதிரியான சின்ன ஏற்ற, இறக்கங்கள் உங்கள் ஃபோர்ட்போலியோவை பாதிக்காது. மேலும், பங்கு வீழ்ச்சியில் இருக்கும்போதும் நீங்கள் ஒரே தொகையை முதலீடு செய்து வருவதால், நீங்கள் வாங்கும் பங்கின் எண்ணிக்கை உயரும். பங்கு ஏறுமுகத்தில் செல்லும்போது நல்ல லாபம் பார்க்கலாம்.
பங்குச்சந்தை ரிஸ்குகளை குறைக்க ஒரு பங்கில் மொத்தத் தொகையையும் முதலீடு செய்யாமல் பிரித்து பிரித்து முதலீடு செய்வது நல்லது.
பங்கு ஏறினாலும், இறங்கினாலும் அதிக மகிழ்ச்சி...அதிக பதற்றம் கூடவே கூடாது. 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது பங்குச்சந்தையிலும் ஒரு கோல்டன் ரூல்.
நாளை: பங்குகளா...ஃபண்டுகளா - நீங்கள் முதலீடு செய்ய ஏற்றது எது?!