தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
BB Tamil 8 : பிக் பாஸின் அதிரடி அறிவிப்பு; உடைந்து அழுகும் முத்துகுமரன் - என்ன நடந்தது? | Video
பிக் பாஸ் சீசன் 8-ல் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கும் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
கடுமையான டாட்ஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோவில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெப்ஃரி மூவரும் அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றனர்.
அப்போது முத்துகுமரன் பவித்ராவுக்கு விட்டுக்கொடுத்து விளையாடினார். எச்சரிக்கையை மீறி மீண்டும் விட்டுக்கொடுத்து விளையாடியதால் கேப்டன்சி டாஸ்க் இந்த வாரம் ரத்து செய்யப்படுவதாகப் பிக் பாஸ் அறிவித்தார்.
மேலும் இனிமேல் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைய முத்துமரன் உடைந்து அழுகிறார். இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றது.