செய்திகள் :

BB Tamil 8: "40 நிமிஷம் அதைமட்டுமே பேசிட்டு இருந்தாரு..."- கொதித்த அர்ச்சனா காரணம் என்ன?

post image
கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா இந்த முறை அருண் பிரசாத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் அருணுக்கு நடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக வீடியோ மூலம் குரல் கொடுத்து வருகிறார். ஏற்கெனவே அருணுக்கு விஜய் சேதுபதி பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். கடந்த வாரம் லேபர், ஸ்கில் டாஸ்க் நடந்தது. அதில் தீபக்கிற்கும், அருணுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த வார எபிசோடில் அருண் நடந்துகொண்ட விதம் பற்றி விஜய் சேதுபதி கோபமாக பல கேள்விகள் எழுப்பியிருந்தார்.

அருண் பிரசாத், அர்ச்சனா

இந்நிலையில் மீண்டும் அருணுக்கு ஆதரவாகப் பேசி அர்ச்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருந்த அர்ச்சனா, " ஒரு வீடு என்றால் எல்லோரும் சமம் தான். நாம் குடும்பத்தோடு இருக்கும் போது, நாம் யாரையும் லேபர் என பிரித்து பார்ப்பது இல்லை. இந்த கருத்தைதான் அருண் சொன்னார். பிக் பாஸ் பொறுத்தவரை கேம் விளையாடுவதுதான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்.

வேலை செய்வது அல்ல. லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டதை எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் பேசியதை மட்டுமே பெரிய பிரச்னையாக பேசினார்கள். தொகுப்பாளர் முதற்கொண்டு அவரை கார்னர் செய்ததால் அருணுக்கு பயம் வந்துவிட்டது.

அர்ச்சனா

விஜய் சேதுபதி கேட்கும்போதுதான் சொல்ல வந்த கருத்தை அவரால் தெளிவாக கூறமுடியவில்லை. இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிது பண்ணினார்கள் என்று தெரியவில்லை. இதை வைத்தே 40 நிமிடம் விஜய் சேதுபதி பேசினார்" என அர்ச்சனா குற்றம்சாட்டி இருக்கிறார்.

Siragadikka Aasai: மனோஜின் முன்னாள் காதலியால் கதையில் திருப்பம் - என்ன நடக்கும்?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கு கிடைத்த ஆர்டர் கேன்சல் ஆகிவிடுகிறது. மீனாவின் தொழில் வளர்ச்சியை தடுக்கும் கதாபாத்திரத்தில் புதிய வில்லியாக சிந்தாமணி அறிமுகமாகியிருக்கிறார்.அந்தப் ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 71: புண்பட்ட ஜாக்குலின்; முத்துவின் ஸ்ட்ராட்டஜி; ரணகளமாக நடந்த நாமினேஷன் டாஸ்க்

ஆட்கள் குறைய குறைய ஆட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பழைய கூட்டணிகள் உடைகின்றன. புதிய கூட்டணிகள் உருவாகின்றன. தனித்து ஆடும் போட்டிகள் பெருகத் துவங்கியிருக்கின்றன. ஆக.. தேவா பொழச்சுப்பான்.. ... மேலும் பார்க்க

BB Tamil 8: `டாஸ்க்கில் மோதல்(?) ; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ராணவ்' - என்ன நடந்தது?

பிக் பாஸ் சீசன் 8-ன் 72- வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பிக் பாஸ் சொல்கிறார்.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்திருக... மேலும் பார்க்க

Bigg Boss 8 : `பிக் பாஸ் வீட்டில் நான் நானாகதான் இருந்தேன்' - எவிக்‌ஷனுக்குப் பிறகு தர்ஷிகா

பிக் பாஸ் சீசன் 8, 70 நாட்களை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.கடந்த இரு வாரங்களாக எதிர்பாரத டிவிஸ்ட்டாக டபுள் எவிக்‌ஷனில் இரு இரு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர். போன வார டபுள் எவிக்‌... மேலும் பார்க்க

Bigg Boss Exclusive: ``செளந்தர்யா மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு" - ஆனந்தி ஓப்பன் டாக்

பிக் பாஸ் சீசன் 8, 70 எபிசோடுகளைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.கடைசி கட்டத்தை எட்டிவிட்டதால் விஜய் சேதுபதியும் நேற்று போட்டியாளர்களிடம் `ஒன் - ஒன்' நேர்காணல் வைத்துப் பேசியிருந்தார். க... மேலும் பார்க்க