"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" - விஜய்யை விமர்சித்த சீமான்
BB Tamil 9: "திவாகர் ஜாலியா இருக்கார்னு நினைக்காதீங்க" - எச்சரித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.26) நாளுக்கான புரொமோ வெளியாகியிருக்கிறது.
அந்தப் புரொமோவில் திவாகர், "வினோத் சார் இரவெல்லாம் தூங்கவிடமாட்டிக்கிறார். தினமும் இரவு தூங்கும்போது எழுப்பிவிட்டு தொந்தரவு செய்கிறார். என்ன வச்சு பேமஸாக திட்டமிட்டு எல்லாத்தையும் செய்கிறார்" என ஆவேசமாக விஜய்சேதுபதியிடம் குற்றம்சாட்டினார்.
இந்தப் பஞ்சாயத்த எதிர்பார்க்காத வினோத், என்ன பதில் சொல்வதென்று தடுமாறிக் கொண்டிருந்தார். உடனே பேசிய விசே, "திவாகர் ஜாலியாக இருக்கார் என அவரை என்னவேனாலும் செய்யலாம்னு அட்வான்ட்டேஜ் எடுத்துக்காதீங்க. அத ஏத்துக்கவே முடியாது, அது சரியில்ல." என கண்டிக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் வேறு யாரையெல்லாம் விஜய் சேதுபதி கண்டிக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.




















