நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
BB Tamil 9: "Unwanted Success-னு எனக்கு பீல் ஆகுது" - கம்ருதீன் குறித்து விஜே பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.28) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி செல்லயிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அந்த புரொமோவில், பிக் பாஸ் வீட்டில் கொஞ்ச நாட்களாக கம்ருதீனுடன் நன்றாகப் பழகி வந்த விஜே பார்வதி தற்போது திவாகரிடம் கம்ருதீன் குறித்து பேசுகிறார்.
"கம்ருதீன் நேற்று டாஸ்க்கில் ஒரு வேலையைப் பார்த்துவிட்டுட்டான். 'அன்வான்டட் டச்சஸ்'னு எனக்கு பீல் ஆகுது. நான் டேட் பண்ணா கமிட்மென்ட் ஓடத்தான் பண்ணுவேன்.

உன்னுடைய ஊறுகாய்க்கெல்லாம் என்னைய பயன்படுத்திக்காத. பவுண்டரி மீறிதான் ஒரு சில விஷயங்கள் பண்ணிட்டு இருக்கான். நீ எனக்கு தோழர், நான் உனக்கு ஒரு தோழி இந்த மீட்டர்லேயே இருந்துக்கோ" என கம்ருதீன் குறித்து பார்வதி பேசுகிறார்.




















