செய்திகள் :

Bengaluru: கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு; சரிந்த அடுக்குமாடிக் கட்டடம்; அரசு சொல்வதென்ன?

post image

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூருவில் கடந்த மூன்று நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. பல இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்திருக்கிறது. மேலும், கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்குப் பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருக்கிறது.

பெங்களூரு

அதோடு, ஐ.டி., நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுவொருபுறமிருக்க, பெங்களூரு கிழக்குப் பகுதியிலுள்ள ஹோரமாவு அகாரா பகுதியில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த அடுக்குமாடி கட்டடம் நேற்று (அக்டோபர் 22) சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணி அதிகாரிகள், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து, அதை நேரில் பார்த்த நபர், "அது ஏழு மாடி கட்டடம். கனமழை காரணமாகக் கட்டிடம் இடிந்து விழுந்தது. மொத்தம் 20 பேர் அங்கிருந்தனர். எங்களுடைய தொழிலாளர்கள் ஏழு பேர் உள்ளிருந்தனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

பின்னர், இது தொடர்பாகத் தகவலறிந்து நேற்றிரவு சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்ட துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "இங்குக் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, கட்டட உரிமையாளர், ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்போம். சட்ட விரோத கட்டுமானங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, 14 பேர் கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், 5 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Rain Alert: வங்க கடலில் உருவாகும் அடுத்த புயல் - தமிழகத்தைப் பாதிக்குமா?

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி, வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மத்திய அந்தமான் கடல்பகுதியில் தற்போது வள... மேலும் பார்க்க

Rain Alert: பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - ரமணன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிகாரிகள் கூட்டத்தை இரு தினங்களுக்கு முன் கூட்டியிருந்தார் தலைமைச் செயலர்இந்... மேலும் பார்க்க

Rain Alert: சென்னைக்கு ஏன் மீண்டும் ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம் என்ன?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த சூழலில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

Rain Alert: ``அதிகனமழை பாதிப்பு சென்னையைத் தாக்காது; சற்று இளைப்பாறலாம்'' - வானிலை ஆர்வலர் தகவல்

சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் நகரம் இயல்புநிலையை இழந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருக்கிறது. சாலைகள், சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்... மேலும் பார்க்க

Rain Alert : `அடுத்த 2 நாள்களுக்கு மழை எப்படி இருக்கும்?' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

'கனமழை, அதி கனமழை', 'எந்ததெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் என்பவைதான் இன்றைய முக்கியச் செய்திகள்.வட கிழக்குப் பருவமழைத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட... மேலும் பார்க்க