ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி
Budget 2025: 'கிரெடிட் கார்டுகள், கடன்கள்'- சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்?
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகி முடிந்துள்ளது.
பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான முக்கிய அறிவிப்புகள்...
* இந்த கிரெடிட் கார்டை உதயம் வலைதளம் மூலம் பெறலாம். 5 லட்ச ரூபாய் லிமிட்டுகள் கொண்ட கிரெடிட் கார்டுகள் இவை. இந்தப் பட்ஜெட்டின் முதல் ஆண்டில் 10 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.
* 5 லட்சம் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களில் முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2 கோடி வரை கடன் (இந்தக் கடன் குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே) வழங்கப்பட உள்ளது.
* பொம்மை உருவாக்கத்தில் இந்தியா உலகளாவிய மையமாக மாற்றப்பட வேண்டும்.
சிறு, குறு, நடுத்தர தொழில் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. அதை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களையும் தொழில்துறைக்கு அழைத்து வரும் நோக்கிலும் மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.