Career: ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி; 5,647 இடங்கள்
வடகிழக்கு எல்லை ரயில்வே (Northeast Frontier Railway) ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்கள்:
பயிற்சி பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 5,647
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்:
Electrician / Fitter / Plumber / Painter / Welder (Gas & Electric) / Diesel Mechanic / Machinist/ Turner / Carpenter / Gas Cutter / Pipe Fitter/ A/C & Referigeration / Surveyor / Health Insperctor/COPA/Lineman/Lab Technician/ Sanitary inspector/ Mason / Draughtsman/ CAD-CAM Operator cum Programmer.
அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கான காலியிட விவரங்கள் கீழே அட்டவணையில்
Slots for Apprenticeship Training
Annexures-I to VIII: பயிற்சிக்கான இடங்கள் மற்றும் பிரிவுகளின் முகவரிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். வயது வரம்பு 3.12.2024 தேதியின்படி கணக்கிடப்படும்
கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று, பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician பிரிவிற்கு அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டு பயிற்சி அளிக்கப் படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
ஆன்லைனில் www.nfr.indianrailways.gov.in என்ற இணையத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதாவது,
- www.nfr.indianrailways.gov.in இணையதளத்தில் --> General Info என்ற பிரிவுக்கு சென்று --> Railway Recruitment Cell GHY என்பதை கிளிக் செய்யுங்கள், விண்ணப்பம் செய்யுங்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 3.12.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மேலும் முழு விவரங்களுக்குTrade Apprentice இந்த லிங்கை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.