நீலகிரி: "யானைப் பொங்கல் பார்க்கலயோ மக்கா.." - தெப்பக்காடு யானைகள் முகாமில் கோல...
Chennai Metro: 'வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது!'- மெட்ரோ பயணிகள் என்ன செய்ய வேண்டும்?!
சென்னை மக்கள் பயணத்தை கொஞ்சம் எளிதாக்கி தருவதில் 'மெட்ரோ ரயில்கள்' மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லுபடியாகாது என்பது தற்போதைய லேட்டஸ்ட் தகவல்.
உடனே, அதிர்ச்சியாகி பதற்றமாகாதீர்கள் மெட்ரோ பயணிகளே... இனி புதியதாக 'சிங்கார சென்னை கார்டு' புழக்கத்திற்கு வரப்போகிறது... வந்தாகி விட்டது. இப்போதே சிங்கார சென்னை கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கார்டை ஸ்டேட் பேக் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து வழங்குகிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் மட்டுமல்லாமல், லோக்கல் ரயில்கள், பஸ்களில் கூட பயணம் செய்யலாம். இது மட்டுமல்ல...ஷாப்பிங், ஹோட்டல் பில்களைக் கூட இந்தக் கார்டை பயன்படுத்தி கட்டலாம்.
இந்தக் கார்டில் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகை க்ளோபல் பேலன்ஸ், ரீடெயில் பேலன்ஸ் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். க்ளோபல் பேலன்ஸை பயணங்களுக்காவும், ரீடெயில் பேலன்ஸை ஷாப்பிங்குகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தக் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ரீசார்ஜ் செய்துகொண்டால் மட்டும் போதும். இப்போது இருக்கும் மெட்ரோ கார்டுகள் வரும் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதனால், இனி அந்தக் கார்டை ரீசார்ஜ் செய்யாமல், சிங்கார சென்னை கார்டிற்கு விண்ணப்பிப்பது நல்லது.
இப்போதிருக்கும் மெட்ரோ கார்டில் இருக்கும் பேலன்ஸை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு, அந்தக் கார்டை மீண்டும் மெட்ரோ நிர்வாகத்திடமே கொடுத்து அந்த கார்டின் டெபாசிட் தொகையான ரூ.50-ஐ பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கார சென்னை கார்டிற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். மேலும், விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.