Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
Chhattisgarh: 9 வீரர்கள் மரணம்... நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் - என்ன நடந்தது?
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதல்களால் 9 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம் அடைந்திருக்கின்றனர்.
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று நக்சல்கள் பாதுகாப்பு படை மீது கொடூரமானத் தாக்குதல்களை நடத்தி இருகின்றனர். பிஜாப்பூரின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது குத்ரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேலி கிராமத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருகின்றனர்.
பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தின் மீது ஐ.ஈ.டி வெடிகுண்டுகள் மூலம் நக்சல்கள் தாக்குதல் நடத்தி இருகின்றனர். இந்த தாக்குதலில் 9 வீரர்கள் மரணம் அடைந்திருக்கின்றனர். பலர் படுகாயமும் அடைந்திருக்கின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.18 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்திருகின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் மாவோயிஸ்ட் வன்முறைக்கு 65 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.