செய்திகள் :

Cristopher Nolan: ஆஸ்கர் நாயகனுக்கு `சர்' பட்டம் வழங்கி கௌரவித்த இங்கிலாந்து மன்னர் குடும்பம்!

post image

உலகத் திரையுலகில் புகழ்ப்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். பேட் மேன் டிரையாலஜி படங்கள் மூலம் திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்ட கிறிஸ்டோபர் நோலன், அறிவியல் புனைவுக் கதைகளுக்கு (Science fiction) மிகவும் புகழ்பெற்றவர்.

கிறிஸ்டோபர் நோலனின் மனைவி எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலனின்அனைத்துப் படங்களிலும் தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வந்தப்படம் ஓபன்ஹெய்மர். இது, இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டு தயாரித்தவரும், அமெரிக்கன் இயற்பியல் வல்லுநருமான ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட வரலாற்று திரைப்படம் ஆகும்.

இந்த நிலையில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் 'சர்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், ஆஸ்கர் விருதுவென்ற புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் `சர்' பட்டம் வழங்கி கௌரவித்தார். இதற்கு முன்னர் இங்கிலாந்து மன்னர் 3-ஆம் சார்லஸிடமிருந்து ‘தி இன்செப்ஷன்’ பட வெளியீட்டின் பின்னர் நைட் ஹூட் என்ற பட்டம் பெற்றிருக்கிறார்.

சர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து அரசக் குடும்ப இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``சர் கிறிஸ்டோபர் நோலன், அவரது மனைவி எம்மா இருவரும் தி டார்க்நைட் டிரையாலஜி (The Dark Knight), ஓபன்ஹெய்மர் (Oppenheimer) ஆகிய மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கி, தயாரித்து திரைப்படத்துறைக்கான இன்றியமையாத பங்களிப்புக்காக அரச குடும்பத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்” எனப் பதிவிடப்பட்டிருக்கிறது. ஓபன்ஹெய்மர் திரைப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 7 விருதுகளை வென்றது. மேலும், இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 976 மில்லியன் டாலர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

Mufasa - The Lion King: அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர்... குரல் கொடுத்தவர்கள் கூறுவதென்ன?

2019-ம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கில், கதாநாயகனான முஃபாசாவுக்... மேலும் பார்க்க

Christopher Nolan: ` ஐமேக்ஸில் புதிய பரிசோதனை!' - அடுத்தப் படத்திற்கான அப்டேட் கொடுத்த நோலன்!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ஐமேக்ஸ் டெக்னாலஜி மீது அப்படியொரு ப்ரியம்.அவர் அதிகளவில் ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்த விரும்புவார். பெரும்பான்மையாக ஐமேக்ஸ் கேமராவை ஆக்ஷன் திரைப்படங்களுக்குத்தான் பயன்ப... மேலும் பார்க்க

28 Years Later: ஐபோனில் படம் பிடிக்கப்பட்ட பிரபல படத்தின் சீக்குவல்! - ஜாம்பியாக கிலியன் மர்ஃபி?

கடந்த இரு தினங்களாக இணையத்தை ஒரு ஹாரர் படத்தின் காணொளி ஆக்கிரமித்திருக்கிறது.நேற்று முன்தினம் வெளியான `28 years later' என்ற திரைப்படத்தின் டிரைலர் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த டிரைலரின் இ... மேலும் பார்க்க

Mufasa: `ஹக்குனா மடாடா' - முஃபாசாவுக்குக் குரல் கொடுத்திருக்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா?

`முஃபாசா தி லயன் கிங்' திரைப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இந்த லயன் கிங் திரைப்பட ஃபிரான்சைஸ் தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். சிம்பா, டிமன் உட்பட அனைத்து கதாபாத்த... மேலும் பார்க்க