CSK : 'சிக்சர் அடிப்பதற்காக சிஎஸ்கே அழைத்து வரும் Ex மும்பை வீரர்!' - பின்னணி என்ன?
'மாற்று வீரர்!'
சென்னை அணி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி இளம் வீரரான டெவால்ட் ப்ரெவிஸை ரீப்ளேஸ்மெண்ட் வீரராக அணிக்குள் அழைத்து வந்திருக்கிறது.

'யாருக்குக் காயம்?'
சென்னை அணியில் ஏற்கனவே கேப்டன் ருத்துராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியிருந்தார். அவருக்குப் பதில் மும்பையை சேர்ந்த 17 வயதெ ஆன ஆயுஷ் மாத்ரே எனும் வீரரை சென்னை அணி மாற்று வீரராக ஒப்பந்தம் செய்து அணிக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், சென்னை அணியில் பென்ச்சில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்நீத் சிங்கும் காயமடைந்திருந்தார்.
அவருக்குப் பதிலாக இப்போது தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரான டெவால்ட் ப்ரெவிஸை சென்னை அணி இப்போது மாற்று வீரராக ஒப்பந்தம் செய்திருக்கிறது.
'டெவால்ட் ப்ரெவிஸ் ஒப்பந்தப் பின்னணி!'
சில மாதங்களுக்கு முன்பு நடந்த மெகா ஏலத்தில் டெவால்ட் ப்ரெவிஸ் 'Unsold' ஆகியிருந்தார். கடந்த இரண்டு சீசன்களாக மும்பைக்காக ஆடியிருந்தார். அவர் அதிரடியாக ஷாட் ஆடும் விதத்தைப் பார்த்து பேபி ஏபிடி என்று அவரை அழைக்க ஆரம்பித்தனர். இங்கே 'Unsold' ஆகியிருந்தாலும் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SAT20 தொடரில் சிறப்பாக ஆடியிருந்தார்.

கடைசி சீசனில் 291 ரன்களை எடுத்திருந்தார். அதிக ரன்கள் எடுத்திருந்தவர்களுக்கான பட்டியலில் 6 வது இடத்தில் இருந்திருந்தார். சென்னை அணியின் வீரர்களால் அதிகமாக சிக்சர்கள் அடிக்க முடியவில்லை என்பது விமர்சனமாக இருக்கிறது. அதை கொஞ்சம் சரி செய்யும் வகையில்தான் டெவால்ட் ப்ரெவிஸை சென்னை அணி இப்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது.