செய்திகள் :

Deepika Padukone: "தீபிகா படுகோன் கேட்பது நியாயமான கோரிக்கை!" - ஆதரவு தெரிவிக்கும் மணி ரத்னம்!

post image

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார். ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார்.

Deepika Padukone
Deepika Padukone

அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்கவந்திருக்கிறார்.

தீபிகா படுகோனே சந்தீப் ரெட்டி வங்காவின் இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து பலவற்றைக் கூறப்பட்டது.

அதில், தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற காரணத்தினால் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி நேரத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார், இந்த பணி நேரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீபிகா படுகோனே நினைத்தபடி நடக்காததால்தான் அவர் 'ஸ்பிரிட்' திரைப்படத்திலிருந்து விலகினார் என்று கூறப்பட்டது.

'தக் லைஃப்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது மணி ரத்னத்திடம், "தீபிகா படுகோனே சினிமாவில் தன்னுடைய பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்துக்கொள்ளக் கேட்பது சரியானதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Mani Ratnam
Mani Ratnam

தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாகவே அவர் பதில் அளித்திருக்கிறார். இந்தக் கேள்விக்கு மணி ரத்னம், "அது ஒரு நியாயமான கோரிக்கை என்று நான் நினைக்கிறேன். அதைக் கேட்கும் நிலையில் அவர் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு திரைப்பட இயக்குநராக இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமற்ற விஷயமல்ல.

தீபிகா படுகோனின் கோரிக்கை அதே நிலைமையில் இருக்கும் பலருக்கும் கதவுகளை திறந்து வைக்கும். இது ஒரு முழுமையான அடிப்படைத் தேவை. அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்," என்று கூறியிருக்கிறார்.

பழனி முருகன் கோவில்: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி தரிசனம் | Photo Album

பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிச... மேலும் பார்க்க

`எங்க ரசிகர்கள்லயே சிலருக்கு இதுபத்தி தெரியாம இருக்கு!’ - பவுண்டேஷன் மூலம் படிப்புக்கு உதவும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகமெங்கும் முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களின்பிள்ளைகளின் உயர்படிப்புக்குசத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். பிளஸ் டூ தேர்வில் 85 சதவிகிதத்துக்கு மேல் எடுத்த... மேலும் பார்க்க

Thug Life: "இந்தச் சமயத்தில் கன்னட மொழி குறித்துப் பேசுவது தேவையில்லாதது" - இயக்குநர் அமீர்

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன் டிஆர், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படம் இன்று (ஜூன் 6) திரையரங... மேலும் பார்க்க

``எங்களை போன்ற இயக்குநர்கள் படுகின்ற பாடு எல்லாம் பெரிய கொடுமை; என் மகன்..'' - தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோவமும்’ திரைப்படம் இன்று (ஜூன்5) வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பு... மேலும் பார்க்க

Subramaniyapuram: 'சுப்ரமணியபுரம்' பட புகழ் மொக்கைச்சாமி என்கிற இலைக்கடை முருகன் காலமானார்!

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் கல்ட் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் இன்றும் அத்திரைப்படத்தை டீகோ... மேலும் பார்க்க