செய்திகள் :

Subramaniyapuram: 'சுப்ரமணியபுரம்' பட புகழ் மொக்கைச்சாமி என்கிற இலைக்கடை முருகன் காலமானார்!

post image

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் கல்ட் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் இன்றும் அத்திரைப்படத்தை டீகோட் செய்து பலர் பேசுகிறார்கள்.

Subramaniyapuram - Mokkaisamy Character
Subramaniyapuram - Mokkaisamy Character

சுப்ரமணியபுரம் திரைப்படம் சினிமாவில் நமக்கு பெரிதளவில் பரிச்சயமில்லாத நடிகர்களையும் நடிக்க வைத்து நமக்கு நெருக்கமாக்கியிருப்பார் சசிகுமார்.

அப்படி டும்கான், சித்தன், மொக்கைச்சாமி ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் நமக்கு நினைவில் இருக்கும் வகையில் அமைத்திருப்பார்.

இதில் மொக்கைச்சாமி என்பவரின் உண்மையான பெயர் முருகன். மதுரை மக்களுக்கு இவர் இலைக்கடை முருகனாக பரிச்சயம்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியின் மார்க்கெட்டில் இலைக்கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார் இவர். 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 படங்களில் நடித்திருக்கிறார் முருகன்.

Subramaniyapuram - Mokkaisamy Character
Subramaniyapuram - Mokkaisamy Character

இப்படங்களுக்குப் பின்னர் மீண்டும் இலைக்கடையையே இவர் பார்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மொக்கைச்சாமியாக இன்றும் நம்மிடையே பரிச்சயமாக இருக்கும் முருகன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 78.

Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிறதா இந்த மேட்னி ஷோ?

அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது. அதை ஏற்று, கண்ணன் ('காளி' வெங்... மேலும் பார்க்க

Thug Life: 'என் மகள் குறுகிய காலம்தான் பணியாற்றினார்; ஆனால்...' - மணிரத்னம் குறித்து நெகிழும் குஷ்பூ

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் ... மேலும் பார்க்க

Thug Life Review: கமல்ஹாசன் - சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் `நாயகன்' மீண்டும் வராரா? ஏமாற்றுகிறாரா?

காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் தாதாவாக டெல்லியை ஆளும் 'தக்'. ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சக்திவேல் தப்பிக்க உதவுகிறான் சிறுவன் அமரன் (... மேலும் பார்க்க

பழனி முருகன் கோவில்: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி தரிசனம் | Photo Album

பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிச... மேலும் பார்க்க