செய்திகள் :

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

post image

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முதல் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்ட சஞ்சய், ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

6 மாதத்தில் 100 புள்ளிகள் குறைப்பு!

கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ விகிதம் குறைக்கப்படாமல் 6.5 ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 100 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதிரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. தொடா்ந்து, ஏப்ரல் மாதமும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மேலும் 0.50 சதவிகிதத்தை குறைத்து 5.5% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்மூலம், வீடு, வாகன, தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : நடிகர் சைன் டாம் சாக்கோ விபத்தில் சிக்கினார்! தந்தை பலி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சுதா்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளாா். வரும் ஆக. 25 முதல் இந்த ந... மேலும் பார்க்க