செய்திகள் :

Deva: ``இந்த அங்கீகாரம் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது!'' - ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவா

post image

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார் தேவா.

அங்கு அவர் ஆஸ்திரேலியாவின் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தினால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்திற்கு தேவா வரவேற்கப்பட்டு, அவைத் தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பளிக்கப்பட்டது.

Deva At Australia
Deva At Australia

அதனைத் தொடர்ந்து பெரும் மதிப்புகளைக் கொண்ட செங்கோலும் அவருக்கு வழங்கப்பட்டது.

தேவாவுக்கு இப்படியான மரியாதைக் கொடுக்கப்பட்டதை அவருடைய இசைக் குழுவினர் ஆர்ப்பரித்துக் கொண்டாடியதுடன், அங்கு அவரைப் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தில் தேவா இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படியான மரியாதைக் கொடுப்பட்டது குறித்து தேவா பேசுகையில், “இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பயணிக்கும் தெற்காசிய கலைஞர்களின் இசை மற்றும் கலாச்சாரத்திற்கும் உரியது.

கடந்த 36 ஆண்டுகளாக எனது இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது உண்மையான பலமாக இருந்து வந்துள்ளது.

இந்த அங்கீகாரம் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது.” என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

Kushi: ``விறுவிறு விஜய், துறுதுறு ஜோதிகா!'' - ̀குஷி' ரீ ரிலீஸ் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து

‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீஸில் அதிரடியாகக் கொண்டாடப்பட்டது. ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்குமா எனப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது. அத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் ... மேலும் பார்க்க

SaiPallavi: ’AI இல்லை, உண்மையான புகைப்படம்’ - சாய் பல்லவியின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்

சமீபத்தில் நடிகை சாய் பல்லவியும் அவரின் தங்கையும் இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவியும் அவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த... மேலும் பார்க்க

Rashi Khanna: தங்க சேலையில் மினுங்கும் ராஷி கன்னா | Viral Clicks

Rashi KhannaRashi KhannaRashi KhannaRashi KhannaRashi KhannaRashi KhannaRashi KhannaRashi KhannaRashi KhannaRashi KhannaJanhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்! மேலும் பார்க்க

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் இயக்குநராக களமிறங்கும் அவர்களின் மகள் தியா! - என்ன படம் தெரியுமா?

இயக்குநராக களமிறங்குகிறார் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா சூர்யா. சினிமாவில் இயங்கி வரும் லைட்வுமன்கள் குறித்து தியா சூர்யா `லீடிங் லைட்' என்ற தலைப்பில் ஒரு டாக்கு டிராமா குறும்படத்தை எடுத்திருக்கிறார்... மேலும் பார்க்க