செய்திகள் :

Dhoni: "5 ஐபிஎல் டிராபி கிரெடிட்டும் தோனிக்கு மட்டும்தான்" - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஐ.பி.எல்லில் மிக மோசமாக ஆடிவருகிறது. இதுவரை 9 போட்டிகளில் ஆடி வெறும் 2 வெற்றிகளுடன் 7 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் சிஎஸ்கே அணி, கிட்டத்தட்ட பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்று கூட கூறலாம்.

தோனி
தோனி

ஒட்டுமொத்த அணியுமே சொதப்பியபோதும் கூட, தோனியை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் `எதற்கு இன்னும் விளையாடவேண்டும், அணிக்கு ஆலோசகராகலாம்' வசைபாடினர். வழக்கம்போல இதுபோன்ற விமர்சனங்களைத் தலைக்குள் ஏற்றாத தோனி, "அடுத்த சீசனுக்கான வலுவான அணியை உருவாக்க வேண்டும்" என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில், தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆர்.பி. சிங், "தோனியின் 5 ஐ.பி.எல் கோப்பைகளுக்கான கிரெடிட்டும் தோனிக்கு மட்டுமே. ஒரு பவுலரை எப்போது கொண்டுவந்து விக்கெட் எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். ஆண்டுதோறும் அணியை வழிநடத்தி சிறந்த வீரர்களை வெளிக்கொண்டுவருவார்.

ஆர்.பி.சிங்
ஆர்.பி.சிங்

தோனியால் இன்னமும் சி.எஸ்.கே-வை வழிநடத்த முடியும். ஆனால், வீரர்கள் நன்றாக இல்லை. நீண்ட நேர மீட்டிங்கில் தோனிக்கு நம்பிக்கை இல்லை. அணியிலிருக்கும் `சர்வதேச வீரர்களுக்கு தங்களின் வேலை என்னவென்று தெரியும்' என்று அடிக்கடி அவர் கூறுவார். முன்கூட்டியே பிளான்கள் எதுவும் அவரிடம் இருக்காது. அவரின் வியூகங்கள் அனைத்தும் களத்தில் போட்டியின் நடுவேதான் எடுக்கப்படும்" என்று கூறினார்.

Jasprit Bumrah: மலிங்காவின் சாதனையை முறியடித்த பும்ரா - பயிற்சியாளர் குறித்து பேசியதென்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா IPL 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீ... மேலும் பார்க்க

DC vs RCB: 'ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது, ஆனால் விராட் கோலி..!' - ஆட்டநாயகன் க்ருணால் பாண்டியா

ஐ.பி.எல் தொடரில் நேற்று(ஏப்ரல் 27) நடைபெற்ற போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெ... மேலும் பார்க்க

MI vs LSG: மீண்டும் ஏமாற்றிய பண்ட்; ஹர்திக் செய்த 2 மேஜிக் மூவ்; மும்பை வென்றது எப்படி?

வான்கடே மைதானத்தில் மும்பை அணியும், லக்னோ அணியும் இன்று (ஏப்ரல் 27) மோதின. தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவுசெய்யும் நோக்கில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற லக்... மேலும் பார்க்க

IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் கேரியரில் 4000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்த... மேலும் பார்க்க

MI vs LSG: ``பூரான், பண்ட் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்று தெரியும்'' - ஆட்ட நாயகன் வில் ஜேக்ஸ்

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவ... மேலும் பார்க்க

MI vs LSG: "எல்லோருக்கும் மேட்ச் க்ளிக் ஆகிறது..!" - வெற்றி குறித்து ஹர்திக் மகிழ்ச்சி

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்... மேலும் பார்க்க