செய்திகள் :

Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத் தருமா?

post image

Doctor Vikatan: சித்த மருந்துகள்  தயாரிப்பில்  உலோகங்கள் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை. இப்படி உலோகங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் எந்த அளவுக்கு உடலுக்குப் பாதுகாப்பானவை?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

சித்த மருந்துகளைப் பொறுத்தவரை பல விஷயங்களில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படும். அப்படிப் பார்த்தால் அடிப்படையில், மூலிகைகள், அடுத்து  தாதுப்பொருள்கள் என்று சொல்லக்கூடிய உலோகங்கள், பிறகு விலங்கினங்களிடம் இருந்து பெறப்படும் பொருள்கள் என எல்லாவற்றிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுவதுண்டு.

சித்த மருந்துகளைப் பொறுத்தவரை மூலிகைகள்தான் அடிப்படை.  'வேர்ப்பாரு தழைப்பாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரு' என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு. 

அதாவது முதலில் மூலிகைகளை முயற்சி செய்து பாருங்கள்... அவற்றில் பலன் கிடைக்காதபோது உலோகங்களை முயற்சி செய்து பாருங்கள் என்பது இதன் அர்த்தம்.

சித்த மருந்துகளில் உலோகங்கள் பயன்படுத்துவது உண்டு என்றாலும், பலரும் நினைக்கிற மாதிரி, மருந்துகளுக்குள் நேரடியாக உலோகங்களைப் புகுத்திக் கொடுக்க மாட்டார்கள். இங்குதான் சித்த மருத்துவ தத்துவமும் அறிவியலும் உண்மையாகிறது.

மருந்துகளுக்கு உலோகங்களைப் பயன்படுத்தும்போது அது பலகட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, புடம் போடுவது, எரிப்பது போன்றவை.

இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் உலோகத்தின் தன்மை மாறும்.  இதன் பின்னணியில் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. அதன் பிறகுதான் அது மருந்தாகவே உருவாகும். 

சித்த மருந்து
சித்த மருந்து

ஓர் உலோகத்தைச் சுத்திகரிப்பது எப்படி, அதை நானோ துகள்களாக, பற்பமாக மாற்றுவது எப்படி என பல கட்டங்கள் நடைபெறும். பெரும்பாலும் உலோகங்களை வைத்துச் செய்யப்படும் மருந்துகள், பற்பம் அல்லது செந்தூரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

அந்த மருந்துகளை தேன் கலந்தோ, கஷாயத்துடனோ சாப்பிட வேண்டியிருக்கும். உலோகம் என்பது தனியே இருக்கும்போது அதன் தன்மைகள் வேறாக இருக்கும். அதுவே மருந்தாக மாறும்போது வேறு தன்மைகள் பெறும். அதனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல், உடலுக்கு நல்லதை மட்டுமே தரும். அதுதான் சித்த மருந்துகளின் சிறப்பே.

கேன்சர் போன்ற பெரிய நோய்களுக்குக்கூட செந்தூரம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவது, அவர்களது ஆயுளை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

பல வருடங்களுக்கு முன்பே, ஹெச்ஐவி நோய்க்கு செந்தூர மருந்துகள் கொடுத்து சோதிக்கப்பட்டுள்ளன. பெரு மருந்துகள் எனப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் இப்படி உலோகங்கள் பயன்படுத்திச் செய்யப்படுபவையாக இருக்கும். எனவே, அவை பாதுகாப்பானவைதான். பயம் வேண்டாம். 
 
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்

மாதவிடாய் நாள்களின் அவதிகள் அதிகரிக்க, அந்த நாள்களில் உண்ணும் சில உணவுகளும் காரணமாகலாம். வலியிலிருந்து விடுபட, தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ. Periods pain Vs fatty ... மேலும் பார்க்க

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதில் மென்மையான பெண் குரல்; இதை சிகிச்சையால் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என்மகனுக்கு 19 வயதாகிறது. அவனுக்குகுரல் மிக மென்மையாக, பெண் தன்மையுடன் இருக்கிறது. இதனால் நண்பர்கள் மத்தியில் கிண்டல், கேலிக்கு உள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். இதைசிகிச்சையி... மேலும் பார்க்க

இளமையையும், அழகையும் குறைக்குமா சர்க்கரை? டயட்டீஷியன் சொல்வது என்ன?

’’சர்க்கரை விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அழகு தொடங்கி ஆரோக்கியம் வரை பல பிரச்னைகளை சர்க்கரை ஏற்படுத்தும்’' என எச்சரிக்கிறார் டயட்டீஷியன் சுஜாதா.சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்ல... மேலும் பார்க்க

பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் வருமா? - ட்ரம்ப் கருத்தும், நிபுணர்கள் மறுப்பும்!

பாராசிட்டமால் அல்லது அசட்டாமினோபென் என அழைக்கப்படும் மாத்திரை, உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி, காய்ச்சல் குறைப்பு மருந்து ஆகும்.சமீபத்தில் இந்த மருந்து குறித்து அமெரிக்க அதிபர் ட்ர... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா: விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி வந்தால் எப்படி சிகிச்சை கொடுக்கப்படும்?

பூமியில் உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்ல முடியும், சிசிச்சை பெற முடியும். ஆனால், விண்வெளியில் உடல்நிலை பாதித்தால், விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மன அழுத்தத்துக்கான சைக்யாட்ரிக் மருந்துக்கு மாற்றாகுமா ‘அமுக்கரா சூரணம்’?

Doctor Vikatan:அமுக்கரா சூரணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுமா, இதை யார் சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும்? மன அழுத்தத்துக்கான ஆங்கில சைக்யாட்ரிக் மருந்துகளுக்கு பதில் இதை எடுப்பது பாதுகாப்பானது என்க... மேலும் பார்க்க