செய்திகள் :

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை காட்டிக்கொடுக்கும் ட்ரோபோனின் டெஸ்ட்; 40 ப்ளஸ்ஸில் அவசியமா?

post image

Doctor Vikatan: நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவோருக்குச் செய்யப்படுகிற ட்ரோபோனின் டெஸ்ட் பற்றி சமீபத்தில் இந்தப் பகுதியில் விளக்கியிருந்தீர்கள். 40 வயது தாண்டிய அனைவருமே இதயநலனைத் தெரிந்துகொள்ள ட்ரோபோனின் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டுமா, ட்ரோபோனின் என்பது ரத்தத்தில் கலக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ட்ரோபோனின் டெஸ்ட் என்பது ரெகுலராகச் செய்யப்படுகிற பிற டெஸ்ட்டுகளைப் போன்றது அல்ல. அதாவது, எந்தப் பிரச்னையும் இல்லாமல், நார்மலாக உள்ளவர்களுக்கு இந்த டெஸ்ட்டை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டோம்.

ஒரு நபருக்கு நெஞ்சுவலி வந்து, மருத்துவரை அணுகும்போது முதலில் இசிஜி பரிசோதனை செய்யப்படும்.  அதையடுத்து ட்ரோபோனின் பரிசோதனை செய்யச் சொல்வோம். ட்ரோபோனின் என்பது நம் இதயத்தின் தசைகளில் இருக்கக்கூடிய ஒருவித புரதம்.

இதயத்தின் திசுக்கள் பாதிக்கப்படும்போது அல்லது  உடலில் உள்ள செல்கள் அல்லது திசுக்கள் எதிர்பாராத விதமாக அல்லது முன்கூட்டியே இறந்து போகும் 'நெக்ரோசிஸ்' நிலையில் இந்தப் புரதமானது, ரத்தத்தில் கலக்கும்.

ECG

இதில்  ட்ரோபோனின் I (Troponin I) மற்றும்  ட்ரோபோனின் T (Troponin T) என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டில் எந்த வகை ட்ரோபோனின் புரதமானாலும் சரி, அது ரத்தத்தில் கலக்கும்போது மிக நுண்ணிய அளவு, அதாவது நானோகிராம் அளவில் இருந்தாலும்கூட இப்போது ஸ்ட்ரிப் டெஸ்ட் என்ற பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.

நெஞ்சு வலி ஏற்படும்போது, இசிஜி பரிசோதனையில் நார்மல் என்று காட்டினாலும், ட்ரோபோனின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம்.

ட்ரோபோனின் அளவு அதிகம் என்று தெரியவரும்போது அந்த நபருக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதற்கான அலெர்ட் மெசேஜாகவும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அளவானது, ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

Chest pain
Chest pain

எனவே, ட்ரோபோனின் என்பது, வழக்கமாக நாம் செய்து பார்க்கிற பிளட் சுகர், யூரியா, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால் பரிசோதனைகளைப் போன்றது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

ட்ரோபோனின் என்ற புரதம், ரத்தத்தில் கலக்காமல் இருக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டும்.

எனவே, அந்த நபருக்கு ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலம் அடிப்படை. உணவுப்பழக்கமும் உறக்கமும் உடற்பயிற்சிகளும் முறையாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே, இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம் தடைப்பட்டு, தசைகள் பழுதடைந்து, ட்ரோபோனின் வெளியே வருவதையும், அது ரத்தத்தில் கலப்பதையும் தவிர்க்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Health: அட்டையில் ஒட்டிய மாத்திரை; ஓப்பன் செய்த மருந்து பாட்டில் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

நமக்கு நல்லது செய்கிற, பிரச்னைகளைச் சரி செய்கிற மாத்திரை, மருந்துகள் சில நேரம் கெட்டதும் செய்யலாம். அது நிகழாமல் தடுக்க நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்களை இங்கே சொல்கிறார் பொது நல மருத்துவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தீபாவளி விருந்து; விதம்விதமான ஸ்வீட்ஸ், கார வகைகள், டயட் சோடா குடிக்கலாமா?

Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவோராகஇருந்தாலும், தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் அன்று ஒருநாள்டயட்டை பின்பற்றுவது சாத்தியமாகாது. அதே சமயம், விதம் விதமான விருந்து, இனிப்பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: `தீபாவளி லேகியம்' எல்லா நாள்களிலும் சாப்பிடலாமா, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?

Doctor Vikatan: தீபாவளிக்குச் செய்கிற லேகியத்தில் என்ன ஸ்பெஷல்? அதை தீபாவளி அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டுமா, மற்ற நாள்களிலும் சாப்பிடலாமா? குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச்... மேலும் பார்க்க

Diwali : காட்டன் டிரெஸ் தீப்பிடிக்கும்; ஆனால், பட்டாசு வெடிக்கையில் அதையே உடுத்த வேண்டும் - ஏன்?

நாளை தீபாவளி ‌என்பதாலேயே இரவெல்லாம் தூங்காமல் கனவு கண்டு, அலாரம் இல்லாமலேயே காலையில் எழுந்து, குளித்து புத்தாடைகளெல்லாம் அணிந்து, நேராக நாம் போகும் இடம் எங்கே..? வீட்டு வாசலுக்குத்தான். இந்த தீபாவளிக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு; ஆஞ்சியோ, சிடி ஆஞ்சியோ எது பெஸ்ட்?

Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டுபிடிக்கிறோம். இந்த டெஸ்ட்டுக்கு பதில் சிடி ஆஞ்சியோ செய்யலாம், ஸ்கேன் மாதிரி சுலபமான டெஸ்ட் அது என்கிறார்களே! அது ... மேலும் பார்க்க

'ORS' லேபிள் ஒட்டுவதற்கு எதிராகப் போராடி வென்ற பெண் டாக்டர்; அதிர்ச்சியான காரணம் இதோ!

ஒரு மருத்துவரின் போராட்டமும் தடை உத்தரவும்...வாந்தி மற்றும் பேதியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளைத்தான்(ORS - Oral Rehyd... மேலும் பார்க்க