செய்திகள் :

Eternal ஆக மாறிய Zomato: ``வாடிக்கையாளருடன் ஒரு உறவு வேண்டும்'' -தீபிந்தர் கோயல் சொல்லும் ஃபார்முலா!

post image

இந்தியாவில் உணவு வர்த்தகத்தில் zomato தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. குறிப்பாக தனது பிராண்டினை பொதுமக்களிடம் அடையாளப்படுத்துவதிலும் , ஞாபகப்படுத்துவதிலும் zomato சிறப்பான யுக்திகளை கையாண்டு வருகிறது.

மின்னஞ்சல் மார்க்கெட்டிங் முதல் குறுஞ்செய்திகள் வர பார்வையாளர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களை அதிகரிக்கும் விதமாக புதிய யோசனைகளை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மனநிலைக்கும் ஒரு அறிவிப்புகள்!

Zomato - சொமேட்டோ

ஹாலோ பிரியா! இன்னைக்கு என்ன ரொம்ப tired ஆ அப்படி என்று நோட்டிஃபிகேஷன் அனுப்பி Zomato தனது வாடிக்கையாளர்களை ஆப்-க்குள் வரவழைக்கிறது. இந்த நோட்டிஃபிகேஷனை பார்த்தும் புன்னகைக்கின்றோம். இதன் மூலம் தனது உணவு பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது.

கவனத்தை ஈர்க்கும் மேசேஜ்

பல ஆன்லைன் பிராண்டுகள் தனது வாடிக்கையாளர்களுக்கு பாப் நோட்டிஃபிகேஷன் அனுப்புகிறது. ஆனால் ZOMATO தனது ஒரு வரி நகைச்சுவை வசனங்களால் வாடிக்கையாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகிறது.

Zomato CEO Deepinder Goyal

ஆஃப்பர் கொடுக்கும் Zomato - எப்படி ஈடுகட்டுகிறது?

Zomato முதன்மையாக உணவு ஆர்டர் செய்யும் செயலியாக இருக்க முக்கிய காரணமே அதில் கொடுக்கும் ஆஃப்பர்கள் தான். இதனால் இழக்கும் லாபத்தை Zomato முக்கியமாக உணவகங்கள் மற்றும் பிராண்டுகளின் விளம்பரங்களைப் பயன்படுத்தி வருவாயைப் பெறுகிறது. Zomato உணவகங்களுக்கு வசூலிக்கும் கமிஷனில் இருந்து வருவாய் ஈட்டுகிறது.

Zomato அதன் சேவையை மார்க்கெட்டிங் செய்ய சொந்த இணையதளம் மற்றும் x, Facebook, Instagram போன்ற சமூக ஊடகங்கள், காட்சி விளம்பரங்கள் ,விளம்பர பலகைகள் தொலைக்காட்சி விளம்பரங்கள் என பலவற்றை பயன்படுத்துகிறது.

Zomato Notification அனுப்புவதன் பின்னால் இருக்கும் கதை

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தீபிந்தர் இது குறித்து கூறியிருந்தார்.

எங்கள் மார்க்கெட்டிங் குழு மிகவும் இளமையானது. அவர்களுக்கு மார்க்கெட்டிங்கில் ஆர்வம் அதிகமே தவிர இதில் எந்த பின்னணியும் இல்லை என கூறினார். ”ஒரு நாள் நான் வாடிக்கையாளருடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள மார்க்கெட்டிங் குழுவிற்கு அறிவுறுத்தினேன். அதன் அர்த்தம் என்னவென்று கூட எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்த மார்க்கெட்டிங் பின்னணியும் இல்லை. நான் ஒரு புத்தகத்தைப் படித்தேன், அதில் வாடிக்கையாளருடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. நான் அதை அவர்களிடம் சொன்னேன். அதனை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்தி வருகின்றனர்" என்றார்.

தீபிந்தர் கோயல்

எட்டர்னல்

இந்த உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு Foodie-Bay என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு நிறுவனம் தனது பெயரை ஸொமேட்டோ என மாற்றியது. இந்த நிலையில், Zomato-வின் பெயரை 'எட்டர்னல்' (Eternal) என மாற்றி புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல்!