செய்திகள் :

Fake Website: `99% ஆஃபரில் ஆப்பிள், சாம்சங் கேட்ஜெட்கள்' - மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

post image

ஆண்டுதோறூம் கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல், பிக் பில்லியன் டேஸ் என்று ஆன்லைன் தளங்கள் ஆஃபர் அறிவிக்கும் சில தினங்கள் இருக்கின்றன. தீபாவளி, பொங்கல் என விழாக்காலங்களில் சில தள்ளுபடிகள் இருப்பது வழக்கம்தான். ஆனால் 99% அதிகமான தள்ளுபடியா?

80,000 ரூபாய் மதிபுள்ள ஆப்பிள் வாட்ச் ரூ.500, ரூ.46,000 மதிப்புள்ள சாம்சங் மொபைல் ரூ.850 எனப் பல பொருள்களுக்கு தாறுமாறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட் போன்றே தோற்றமளிக்கும் ஓர் போலி வலைத்தளம்.

நம்பமுடியாத ஆஃபர்களை வழங்கிய அந்த தளம் ஃப்ளிப்கார்ட் என்ற பெயரிலேயே இருக்கும். பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடிக்கான முத்திரை இருக்கும். ஆனால் இது ஃப்ளிப்கார்ட் இல்லை.

Fake Website

இந்த வலைத்தளம் ஃப்ளிப் கார்ட் போலவே தோற்றமளித்தாலும் இதன் URL exclisivese.live என்று இருக்கும். வேறு போலி வலைத்தளங்களில் வேறு URL இருக்கலாம். flipkart.com என்ற URL மட்டுமே உண்மையானது. ஆனால், நாம் எத்தனை முறை லிங்க் ஒன்றைக் கிளிக் செய்து வலைத்தளத்துக்குச் செல்லும்போது URL-ஐ செக் செய்கிறோம்...

URL பார்க்காவிட்டாலும் இது போலி என்பதைக் கண்டறிய பல வழிகள் இருக்கின்றன. க்ளிக் செய்தாவரும் டீல்ஸ் பக்கத்தைத் தவிர, எலக்ட்ரானிஸ், ஃபேஷன் போன்ற தலைப்புகளை க்ளிக் செய்தால் அவை க்ளிக் ஆகாது. இதை வைத்தே இது போலி என கண்டறியலாம்.

எல்லா பொருள்களும் 99% தள்ளுபடி என போடப்பட்டிருக்கும். ஆனால் அதன் விலையையும் ஆஃபர் விலையையும் ஒப்பிட்டால் கணக்கு சரியாக இருக்காது. இதுவும் ஒரு ஓட்டைதான். இது எதையும் கண்டுகொள்ள முடியாதபடி ஆஃபரால் ஈர்க்கப்பட்டு க்ளிக் செய்தீர்கள் என்றால் என்ன நடக்கும் தெரியுமா?

Flipkart போல தோற்றமளிக்கும் போலி வலைத்தளம்

நீங்கள் எதாவது பொருளை வாங்க முயன்றால் அது உங்களை மற்றொரு வலைப்பக்கத்துக்கு எடுத்துச் செல்லும். அங்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைக் கேட்கும். எந்த ஒரு வலைதளத்திலும் உங்கள் தகவல்களை குறிப்பிடும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டுமுறை வலை தளத்தை செக் செய்ய வேண்டும்.

ஏனென்றால் இங்கு உங்களது தகவல்கள் திருடப்பட்டு மொத்தமாக விற்கப்படும் அல்லது மற்ற பொருளாதார குற்றங்களில் ஈடுபட பயன்படும். உங்கள் தகவல்களை கொடுத்து உள்ளே சென்றால்...

நீங்கள் அடிக்கடி ஃப்ளிப்கார்ட் உபயோகிப்பவராக இருந்தால் இதுபோன்ற அதன் பேமென்ட் பக்கத்தைப் பார்த்ததும் போலி என்பதைக் கண்டுபிடித்துவிடுவீர்கள். பெரும்பாலும் போலி வலைத்தளங்களில் கேஷ் ஆன் டெலிவரிக்கான ஆப்ஷனே இருக்காது. யு.பி.ஐ மட்டுமே ஒரே வழியாக இருக்கும்.

Cyber Security

பெரும்பாலும் போலி வலைத்தளங்கள் நேரடியாக உங்களிடம் இருந்து பணத்தைப் பெருவதில்லை. மாறாக உங்கள் தகவல்களை மட்டுமே திருடும். அதன்பிறகு நீங்கள் சைபர் குற்றங்களுக்கான இலக்குகளாக மாறிவிடுவீர்கள்!

ஃப்ளிப்கார்ட் மட்டுமல்லாமல் அமேசான் உள்ளிட்ட பல ஷாபிங் வலைத்தளங்களின் பெயரில் போலி வலைத்தளங்கள் செயல்படுகின்றன. கேரளா சைபர் காவல்துறை இதுவரை 155 போலி வலைத்தளங்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலி வலைத்தளங்களில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக (ஒரு மணி நேரத்துக்குள்) புகார் அளித்தால், பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறியுள்ளனர் கேரள காவலர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே... மேலும் பார்க்க

மூணாறுக்குப் பள்ளிச் சுற்றுலா; காவல் நிலையத்தில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்!

கேரளாவில் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள், கஞ்சா பீடி பற்றவைக்கத் தீப்பெட்டிக்காக ஒர்க ஷாப் கட்டடம் என்று நினைத்து உள்ளூர் காவல் நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்க... மேலும் பார்க்க

சென்னை: வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் - சிக்கியது எப்படி?

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னையில் கல்லூரி... மேலும் பார்க்க

அரசு வேலை; போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி... சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளாராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதங்களாக பணியில் இருந்தவர். இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த போது அரச... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அமர்ந்து ரகளை; திருப்பூர் இளைஞர் கைது; வைரலாகும் வீடியோ

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து கடந்த 21-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியே ... மேலும் பார்க்க

Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!

வெவ்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் யூடியூபர் இர்ஃபான்.சில மாதங்களுக்கு தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை வெளிநாட்டுக்குச் சென்று அறிந்துக் கொண்ட இர்ஃபான் அதனை `Gender Reveal' என... மேலும் பார்க்க