கபூர் குடும்பத்தினருடன் மோடி; பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல்! - விமரிசிக்கும் காங...
G.V.Prakash: ``என் கரியரில் பெரிய ஹிட்ஸ் கொடுத்தது ஜி.வி சார்தான்" - நெகிழ்ந்த சைந்தவி
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
இருவருக்கும் 'அன்வி' எனும் மகளும் உள்ளார். 11 வருட காதல் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக சில மாதங்களுக்கு முன் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த கான்சர்ட்டில் இருவரும் ஒன்றாக 'பிறை தேடும் இரவிலே' பாடலைப் பாடினர்.
இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே அந்த மேடையில் சைந்தவி ஜி.வி குறித்து பேசியது வைரலாகி வருகிறது. பாடலை பாடிய பிறகு மேடையில் பேசிய சைந்தவி, " என் கரியரில் பெரிய ஹிட்ஸ் கொடுத்தது ஜி.வி சார்தான். அந்த மாதிரியான ஹிட் பாடல்களை என் கரியரில் கொடுத்ததற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி மலேசியா" என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...