செய்திகள் :

Game Changer: அரசியல் அதிரடி பன்ச் - கேம் சேஞ்சரில் இந்த செய்தி இருக்கிறதா?

post image
பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் 'கேம் சேஞ்சர்' படம் வெளியாகிறது.

தெலுங்கில் வெகுநாட்கள் கழித்து ராம் சரணுக்கு படம் வெளியாவதால் அங்கே எக்கச்சக்க பரபரப்பு கூடியிருக்கிறது. இந்தப் படத்தை ரொம்பவும் சந்தோஷமாக கொண்டாட சிரஞ்சீவி ரசிகர்களும், ராம்சரண் ரசிகர்களும் சேர்ந்து தயாராகி இருக்கிறார்கள். எம்.ஜி என்ற முறைப்படி தமிழ் திரையில் வெளியிடும் உரிமையை வாங்கப் போட்டி இருந்ததில் கடைசியாக ராக்போர்ட் நிறுவனம் பெற்றுவிட்டது.

‘கேம் சேஞ்சர்' படத்தில்...

அதில் இருக்கிற நிறைய சம்பவங்கள் ஆந்திரா தெலங்கானாவில் இப்போது நடைபெற்ற சம்பவங்கள் போல இயல்பாக அமைந்து விட்டதாம். அதனால் அந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு தெலுங்கில் எதிர்பார்ப்பு கூடி வருகிறது. பொதுவாக ஷங்கர் படங்களில் சாதாரண மனிதர் திடீரென முதல்வரானால் என்னவாகும் அதன் சுவாரசியங்கள் என்னென்ன என்று அதையே எல்லாரும் உட்கார்ந்து பார்த்து ரசிக்கிற மாதிரி செய்தார். இது மாதிரி ஒரு விஷயம் நடந்தால் அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும், அது எப்படி இருக்கும் என்பதைக் கொண்டு வருவது தான் ஷங்கரின் பாணி.

ஆந்திராவிற்கு இது சரி. தமிழுக்கு இது எந்த விதத்தில் மாறும் என்பதற்கு பதிலாக ஷங்கர் தமிழில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக செய்திகள் வருகிறது. தமிழ்நாட்டு அரசியலுக்கேற்ப அந்த மாற்றங்கள் இருக்கிறதாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பற்றி நேரடியாக வெளிப்படையாக வைத்து விடாமல் அந்த விஷயங்கள் தொனிக்கும்படி காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.

கேம் சேஞ்சர்

அது தமிழில் பெரிய வரவேற்பைக் கொடுக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். இன்னும் படம் வெளியாக சில நாட்களே இருப்பதால் நாம் பொறுத்திருந்து எப்படி அமைந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

Ajithkumar Racing: "இந்த ரேஸ் அஜித் சாரோட கனவு''- துபாயிலிருந்து ஆரவ்

24H கார் பந்தயத்திற்காக துபாயில் இருக்கிறார் நடிகர் அஜித்.கடந்த ஆண்டு 'அஜித்குமார் ரேஸிங் டீம்' என்ற குழுவைத் தொடங்கி ரேஸிங் களத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அஜித். தற்போது அந்தக் குழுவுடன் கார்... மேலும் பார்க்க

Pongal Telecasting: பொங்கலுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்... என்னென்ன?

பண்டிகை விடுமுறை தினங்களில் சினிமாதான் முக்கியமானதொரு என்டர்டெயின்மென்ட்.அன்றைய தினத்தில் வெளியாகும் திரைப்படங்களைப் திரையரங்குகளில் பார்த்துவிட்டு, பலரும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் படங்களைப் ... மேலும் பார்க்க

`ஒரு டைரக்டராக பார்க்கும் போது..!’ - மகள் அதிதி, மகன் அர்ஜித் குறித்து நெகிழும் ஷங்கர்

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்..``30 வருடங்கள் 15 திரைப்படம். இன்னும் ... மேலும் பார்க்க

Shankar: `ரஜினி சாரை வைத்து ஒரு பயோ-பிக்; வெரி மச் இம்பரஸ்ட் வித் `கெத்து’ தினேஷ்’ - ஷங்கர் ஷேரிங்ஸ்

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் சங்கரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்..`2024 ஆம் ஆண்டில் உங்களை இம்ப்ரஸ் செய்... மேலும் பார்க்க

Letterboxed: `மெய்யழகன், வாழை, மகாராஜா, லப்பர் பந்து’ - உலகளவில் கவனம் பெற்ற தமிழ் திரைப்படங்கள்

உலகம் முழுவதும் பல மில்லியன் சினிமா ரசிகர்கள் 'லெட்டர் பாக்ஸ்ட்' (Letterboxed) செயலியைப் பயன்படுத்துகின்றனர். தேடித் தேடி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இது இரைகள் செழித்த சினிமா காடு, எல்லையில்லாமல் வே... மேலும் பார்க்க

Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை!

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்... மேலும் பார்க்க