ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் ...
Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன?
இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடந்த காசா அமைதி கூட்டத்தில் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

பேச்சுவார்த்தை...
கடந்த 29-ம் தேதி, இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான 20 அம்சங்களை ட்ரம்ப் பரிந்துரைத்தார். அதை அன்றே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3), ஹமாஸும் ட்ரம்ப் பரிந்துரைத்த ஒரு சில அம்சங்களை ஒப்புக்கொண்டது. மற்றவற்றைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டது.
அதற்கேற்ற மாதிரி, கடந்த வாரம், எகிப்தில் இஸ்ரேல், காசா தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைவரும் உடன்பட, நேற்று இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுவித்தன. இதனையடுத்து நேற்று வெற்றிகரமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சில கேள்விகள்...
இருந்தும், இன்னும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில கேள்விகள் இருந்துகொண்டே இருக்கின்றன...
முதல்கட்டமாக, பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். அடுத்த கட்டமாக என்ன நடக்கும்?
எப்போது காசாவில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப்பெறும்?
எப்போது, யார் காசாவில் அமைதி நிலைநாட்டுவதற்கான சமாதானக் குழுவை அமைப்பார்கள்?
அடுத்ததாக, இஸ்ரேல், காசா தரப்பில் இருந்து என்ன நடவடிக்கையை மேற்கொள்வார்கள்? அதில் உலக நாடுகள் என்ன பங்கு வகிக்கும்?