செய்திகள் :

Gold Rate: இந்தியாவை விடக் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் 5 நாடுகள்! இப்போது தங்கம் வாங்கலாமா?!

post image
தங்கம் விலை என்னதான் ஏற்றம் கண்டாலும் நம்மவர்களுக்கு அதன் மீதான ஈர்ப்பு மட்டும் குறைந்தபாடில்லை. இன்றளவிலும் நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டமே அதற்குச் சாட்சி. இன்று நேற்று மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாகத் தங்கம் முக்கிய சொத்தாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பல ஆயிரம் முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும், தங்கத்திற்கு என்று ஒரு தனி இடம் உண்டு. இன்றும் தங்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

தங்கத்தைக் காட்டிலும் அதிக வருமானம் கொடுக்கும் ஈக்விட்டிகள் உள்ளிட்ட முதலீடுகள் இருந்தாலும், நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீடுகளில் தங்கம் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏன் அதிகம் வாங்கப்படுகிறது?

Gold Rate

பல தசாப்தங்களாகவே இந்தியா தங்கம் இறக்குமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக இருந்து வருகிறது. இந்த அளவிற்குத் தங்கத்தை வாங்க என்ன காரணம் என்பதைப் பார்க்கும் போது, ஆரம்ப காலகட்டங்களில் ஆபரணத் தேவைக்காக வாங்கி வந்த மக்கள், சமீப காலமாக முதலீட்டு நோக்கில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது முதலீடு மற்றும் சொத்து உருவாக்கம் என்பதைத் தாண்டி, சமுதாயத்தில் அந்தஸ்தைக் காட்டும் ஒரு கருவியாகவும் பார்க்கப்படுகிறது. 

விலை அதிகரிக்கும்?

இன்றைய காலகட்டத்தில் திருமணம் உள்ளிட்ட முக்கிய காலகட்டங்களில், தங்கம் அவசியமாகப் பார்க்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆக, இதுவும் உள்நாட்டில் விலை உச்சம் தொடக் காரணமாக அமைந்துள்ளது. மேற்கொண்டு வரவிருக்கும் தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் மக்கள் தங்கம் வாங்குவது அதிகரிக்கலாம். இதுவும் விழாக் காலப் பருவத்தில் விலை அதிகரிக்க வழிவகுக்கும்.

தங்கம் விலையானது சர்வதேச நாடுகளில் நாட்டுக்கு நாடு விலை வேறுபட்டுக் காணப்படுகிறது. எனினும் பலரும் கேட்பது எந்த நாட்டில் விலை குறைவு என்பதுதான். இந்தியாவைக் காட்டிலும் விலை குறைவாக உள்ள 5 நாடுகளில் தங்கம் விலை எவ்வளவு குறைவு என்பதைப் பார்க்கலாம்.

இந்தோனேஷியா

Gold - தங்கம்

கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மலிவான விலையில் தரமான தங்கம் கிடைப்பதாகத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தோனேஷியாவில் அக்டோபர் 12 அன்று நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,330,266 இந்தோனேஷிய ரூபாயாகும். இது இந்திய மதிப்பில் சுமார் 71,880 ரூபாயாகும். அதே நாளில் இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை 77,700 ரூபாயாகும். ஆக, 10 கிராம் தங்கத்தின் விலை வித்தியாசம் 5,820 ரூபாயாகும்.

மலாவி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,482,660.70 மலாவியன் குவாச்சா ஆகும். இந்திய மதிப்பில் இது 72,030 ரூபாயாகும். இதே நாளில் இந்தியாவில் உள்ள 77,700 ரூபாயுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 10 கிராமுக்கு 5,670 ரூபாய் குறைவாகும்.

ஹாங்காங்

ஹாங்காங்கில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 665 ஹாங்காங் டாலராகும். இதன் இந்திய மதிப்பு 72,050 ரூபாயாகும்.  அதே நாளில் இந்திய விலையான 77,700 ரூபாயுடன் ஒப்பிடும்போது 10 கிராமுக்கு 5,650 ரூபாய் குறைவாகும்.

தங்கம் (Gold)

கம்போடியா

தரமான தங்கத்திற்கு எனப் பேர் போன கம்போடியாவில் 24 காரட் தங்கத்தின் விலை, இந்தியாவுடன் ஒப்பிடும்போது 10 கிராமுக்கு 5640 ரூபாய் குறைவாகும். கம்போடியன் கரன்சியில் 10 கிராமுக்கு 347,373.43 கம்போடியன் ரியல் ஆகும். இதன் இந்திய மதிப்பு 72,060 ரூபாயாகும்.

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல், குவைன், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்களில், துபாயில் தங்கத்தின் விலை சற்று குறைவாகும். அங்கு வரி விதிப்பில் சலுகை உண்டு. துபாயில் தங்கத்தின் தரமும் சிறப்பாகக் காணப்படும் நிலையில், துபாய், தங்கம் வாங்க ஏற்ற நாடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இங்குக் கடந்த அக்டோபர் 12 அன்று 24 காரட் தங்கம் விலை 10 கிராமுக்கு 3,180.25 அராப் எமிரேட்ஸ் திர்ஹாம் ஆகும். இது இந்திய ரூபாயில் 72,840 ரூபாயாகும். இந்தியச் சந்தையுடன் ஒப்பிடும்போது 10 கிராமுக்கு 4,860 ரூபாய் குறைவாகவே காணப்படுகிறது.

தங்கம் விலை எப்படியிருக்கும்?

இரண்டு மாத உச்சத்தின் அருகில் காணப்படும் டாலர் மதிப்பின் மத்தியில், தங்கம் விலையானது சற்று அழுத்தம் கொண்டிருந்தாலும், தங்கத்தின் விலையை மேற்கொண்டு ஊக்குவிக்கும் விதமாகவே பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. குறிப்பாக புவிசார் அரசியல் பதற்றங்கள், சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை என பலவும் விலை ஏற்றம் காணக் காரணமாக அமையலாம். குறுகிய காலத்தில் சில காரணிகள் விலை குறையக் காரணமாக இருந்தாலும், தொடர்ந்து விலை அதிகரிக்க பல்வேறு காரணிகள் தங்கத்திற்குச் சாதகமாகக் காணப்படுகின்றன.

Gold: தங்கம் விலை
குறிப்பாக தற்போது முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறித்த முடிவு. இது தங்கம் விலையில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம். இது ஆபரணத் தங்கத்தின் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எப்படி இருப்பினும் விழாக்கால பருவத்தில் அதிக அளவிலான தேவை, விலையை மேற்கொண்டு ஊக்குவிக்கலாம்.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

General Disclaimer and Terms & Conditions of the research report

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING.

Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.

Gold Rate: தங்கம் விலை 18 நாள்களில் பவுனுக்கு ரூ.4,080 குறைவு! - காரணம் என்ன... இன்னும் குறையுமா?

கடந்த 18 நாள்களில், தங்கம் விலை பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.4,080 இறங்கி உள்ளது.ஆயுத பூஜையையொட்டி குறைந்திருந்த தங்கம் விலை, தீபாவளிக்கும் சற்று குறைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்த மக்களுக்கு... மேலும் பார்க்க

Gold Price: 'இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைவு!' - காரணம் என்ன?!

'குறையுமா...குறையாதா?...இப்படி ராக்கெட் வேகத்துல ஏறிகிட்டு இருக்கே' என்று எதிர்பார்த்துகொண்டிருந்த மற்றும் பேசப்பட்டு கொண்டிருந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. கடந்த மாதம் மட்டும... மேலும் பார்க்க

Gold rate today: தங்கம் விலை பவுனுக்கு ரூ.59,000-த்தை தொட்டது!

இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளி வர உள்ள நிலையில், தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.59,000-த்தை தொட்டுள்ளது. பண்டிகை காலம், முகூர்த்த தினங்கள் வர வர.. தங்கம் வாங்குவது இந்திய குடும்பங்களில் வழக்கம். ஆன... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு... விரைவில் ரூ.58,000 தொடுமா?!

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட இரண்டே நாள்களில் மீண்டும் புதிய வரலாற்றை படைத்துள்ளது. 'இப்போவா...அப்போவா' என்று இந்த மாதம் தொடக்கம் முதலே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது...நேற்று முன்தினம் நடந்தது. ஆம்... மேலும் பார்க்க

Gold Rate: `தங்கம் விலை ரூ.57,000-த்தை தாண்டியுள்ளது!' - வரலாற்றில் இதுவே முதல் முறை!

'இப்போ தாண்டிவிடுமோ... அப்போ தாண்டிவிடுமோ' என்றிருந்த தங்கம் விலை, தற்போது பவுனுக்கு ரூ.57,000-த்தை தாண்டிவிட்டது.இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.56,960 வரை சென்று இன்னும் ஓரிரு நாள்களி... மேலும் பார்க்க