Gold Rate Today: 'இன்னும் 40 ரூபாய் மட்டுமே...' - இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்று 2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக உள்ளது. தாறுமாறாகத் தங்கம் விலை எகிறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பட்ஜெட்டில் எதாவது அறிவிப்பு வெளியாகி தங்கம் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலிருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் உயர்ந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,745-க்கு விற்பனை ஆகி வருகிறது.
இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.61,960-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.62,௦௦௦-ஐ தொட இன்னமும் ரூ.40 மட்டுமே உள்ளது.
இன்றைய வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரு கிராமுக்கு ரூ.107 ஆகவே தொடர்கிறது.
பட்ஜெட்டுக்கு பின், தங்கம் விலை மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.