Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
Good Bad Ugly: `அந்த BGM' - அஜித் ரசிகர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் கொடுத்த ரணகள அப்டேட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனியின் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்தது ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் 'குட் பேட் அக்லி' இசை பற்றி ஜி.வி. பிரகாஷ் கூறியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகி இருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் மலேசியா கான்சர்ட்டில் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பணிகள் எப்படி சென்றுக் கொண்டு இருக்கிறது என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளிதிருந்த ஜி.வி பிரகாஷ், " ஆயிரத்தில் ஒருவனில் இடம்பெற்ற 'Celebration of Life' பிஜிஎம்-க்கு டான்ஸ் ஷூட் பண்ணா எப்படி இருக்கும்.. செம்மயா இருக்கும்-ல அந்தமாதிரி இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.