செய்திகள் :

Guillian Barre Syndrome: 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; ஒருவர் மரணம்! - என்ன நடக்கிறது புனேவில்?

post image

கிலன் பார் சிண்ட்ரோம் Guillian Barre Syndrome (GBS). கடந்த 3 வாரங்களாக புனே நகரில் வேக வேகமாக பரவிக்கொண்டிருக்கிற நரம்பியல் நோய் இது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் உள்ளதாகவும், 7 பேர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் பிரகாஷ் அபிட்கார் தெரிவித்துள்ளார்.

Guillian Barre Syndrome

கிலன் பார் சிண்ட்ரோம் ஒரு தொற்று நோய் அல்ல. இதுவொரு அரிய வகை ஆட்டோ இம்யூன் நோயாகும். அதாவது, நம்முடைய உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு மண்டலம் நம்மை பாதுகாக்கும் வேலையை செய்யாமல், நம் உடலையே தாக்க ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடல் சோர்வு, தசை பலவீனம், நரம்புகளில் பிரச்னை என பெரும் அவதிக்குள்ளாவார்கள். புனேவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும், சென்ற வாரம் அதில் ஒருவர் மரணமடைந்ததும் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய உயர் மட்ட நிபுணர்களை புனேக்கு அனுப்பி, Guillian Barre Syndrome பிரச்னைக்கான காரணங்களை ஆய்வு செய்யவும், அம்மாநிலத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த உதவவும் அறிவுறுத்தியுள்ளது.

கிலன் பார் சிண்ட்ரோம் காரணமாக மரணமடைந்தவரின் குடும்பத்தினர், 'ஜனவரி 9-ஆம் தேதி அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதற்காக அவர் கடையிலிருந்து மருந்து வாங்கி சாப்பிட்டார். ஜனவரி 14-ம் தேதி உடல்நிலை நன்றாக இருந்ததால் குடும்பத்துடன் சோலாப்பூர் செல்ல வாகனம் ஓட்டினார். ஆனால், ஜனவரி 17-ம் தேதி அவருடைய உடல் பலவீனமாக இருந்ததால், மறுநாள் மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக ஆறு நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தார். பின்னர் அவர் உடல்நிலை சற்று மேம்பட்டு ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக திடீரென அவரது நிலைமை மோசமடைந்து, சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்' என்று தெரிவித்திருக்கின்றனர்.

Guillian Barre Syndrome

இதுபற்றி மருத்துவர்கள், 'நோயாளி மிகவும் பலவீனமாக மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனைகள் மூலம் அவருக்கு வந்திருப்பது கிலன் பார் சிண்ட்ரோம் என்று கண்டறிந்தோம். உடனே சிகிச்சையைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும், பின்னர் பலவீனமாகி விட்டார். அவருடைய செரிப்ரோ ஸ்பைனல் நரம்புகள் மற்றும் உடலுறுப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். இதன் மூலம் எந்தத் தொற்று GBS-யை உண்டாக்கியதென கண்டறிய முடியும். இதற்கிடையே, அசுத்தமான நீரை தொடர்ந்து குடித்த காரணத்தால், அதிலிருக்கிற கிருமிகள் காரணமாகவும் இந்தப் பிரச்னை வந்திருக்கலாம். அதனால், சுத்தமான உணவு, காய்ச்சிய நீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்த பாக்டீரியாவையும் வைரஸையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

குடும்ப வன்முறை; பாதிக்கப்பட்ட மனைவிக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு - தொடர் சிக்கலில் மகா., அமைச்சர்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே தனஞ்சே முண்டேயிக்கு ந... மேலும் பார்க்க

பூனம் குப்தா: ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் - எப்படி சாத்தியம்?

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரியான பூனம் குப்தா இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளவு... மேலும் பார்க்க

1000-க்கு 'T' பதிலாக ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது? - பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

எண்களில் ஆயிரத்தை 1k என்று குறிப்பதை நாம் பார்த்திருப்போம். மில்லியனுக்கு 'M' என்ற வார்த்தையும் பில்லியனுக்கு 'B' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படும் இடத்தில் ஆயிரத்திற்கு ( thousand) மட்டும் ஏன் 'T' ... மேலும் பார்க்க

Ed Sheeran: சென்னையில் கான்சர்ட் நடத்தும் பிரிட்டிஷ் பாடகர்; பேரன்பைக் கொடுக்கும் மக்கள்- யார் இவர்?

இங்கிலாந்தில் பிறந்த இவர் சென்னையில் கான்செட் நடத்தும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருப்பது பெரும் பிரமிப்பை உண்டாக்குகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வந்த இங்கிலா... மேலும் பார்க்க

முதல்வர் பதவி... மும்பை முதல்வர் இல்லத்தில் எருமையை பலியிட்டு பில்லிசூனியம் வைத்தாரா ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் முதல்வராக இருப்பவர்களுக்காக வர்ஷா என்ற அரசின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த இல்லத்தில் தான் முதல்வர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளை மேற... மேலும் பார்க்க

காதல் தோல்வி கட்டாயம்; 'Chief Dating Officer' பதவி ஆள்தேடிய நிறுவனம் - முக்கிய கண்டிஷன் இவைதான்!

பெங்களூருவைத் தளமாகக் கொண்ட டாப்மேட் என்ற நிறுவனத்திற்கு தலைமை டேட்டிங் அதிகாரி வேண்டுமென்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட்டர் நிறுவனங்கள் வந்துவிட்... மேலும் பார்க்க