செய்திகள் :

Gukesh : `அன்று மேக்னஸ் ஜெயித்தபோது என் நாட்டுக்காக கண்ட கனவு..!' - உலக சாம்பியன் குகேஷ் நெகிழ்ச்சி

post image
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆகியிருக்கும் இந்திய வீரர் குகேஷ், இளம் உலக சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செஸ் உலக சாம்பியன் குகேஷ், ``என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் இது. ஆறேழு வயதில் செஸ் விளையாடத் தொடங்கிய நாள் முதல் இதுபற்றி கனவு கண்டிருக்கிறேன். 10 வருடங்களுக்குப் பிறகு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். எல்லா செஸ் வீரர்களும் இந்த இடத்துக்கு வர விரும்புவார்கள்.

குகேஷ்

ஆனால், வெகு சிலருக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது அந்த வெகுசிலரில் ஒருவனாக இருக்கிறேன். முதலில் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு தேர்வானது முதல் அனைத்தும் கடவுள் இல்லாமல் சாத்தியமில்லை.

இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சாம்பியன் பட்டம் இந்தியாவிடமிருந்து சென்றது. 2013-ல் கண்ணாடி அறைக்கு வெளியே இருந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒருநாள் நானும் அந்த இடத்தில் இருப்பேன் என்று நினைத்தேன்.

குகேஷ்

அன்று மேக்னஸ் வெற்றிபெற்றபோது, சாம்பியன் பட்டத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர விரும்பினேன். இன்று அது நிறைவேறியிருக்கிறது. என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் இது. என்னை நேசிப்பவர்களுக்காகவும், எனது நாட்டுக்காகவும் இதைச் செய்திருக்கிறேன். இதைவிட வேறெதுவும் சிறந்ததாக இருக்க முடியாது." என்று கூறினார்.

குகேஷ் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் மோடி உட்பட தலைவர்கள், செஸ் வீரர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Gukesh: 'உலக சாம்பியனான குகேஷ்!' - டிங் லிரனை எப்படி வீழ்த்தினார்?

சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. குகேஷ் இந்தச் சுற்றை வென்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறார்.சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் ச... மேலும் பார்க்க

Harry Brook : 'அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 வீரர்' - ஹாரி ப்ரூக் எப்படி சாதித்தார்?

'தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!' என ரிக்கி பாண்டிங் உச்சி முகர்ந்து பாராட்டுகிறார். 'அவர் அத்தனை திறன்களும் வாய்க்கப் பெற்ற முழுமையான கிரிக்கெட்டர்!' என ஜோ ரூட் புகழாரம் ... மேலும் பார்க்க

FIFA World Cup : `2034 உலகக்கோப்பையை நடத்தும் சவுதி அரேபியா' - அப்டேட் கொடுத்த FIFA

2034 ஆம் ஆண்டுக்கான FIFA கால்பந்து உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.FIFA கடைசியாக 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் நடந்திருந்தது. 20... மேலும் பார்க்க

ICC Rankings : 'கடும் பின்னடைவில் கோலி, ரோஹித்' - ICC ரேங்கிங்கில் இந்திய வீரர்களின் நிலை என்ன?

டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்களான விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தரவரிசைப் பட்டியலில் கடும் சரிவை சந்தித்திருக்கின... மேலும் பார்க்க

World Chess Championship: `சமநிலையில் சாம்பியன்ஷிப்; இன்று இறுதிச்சுற்று!' - சாதிப்பாரா குகேஷ்?

சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 13 சுற்று ஆட்டங்கள் முடிந்திருக்கிறது. இந்நிலையில், குகேஷூம் டிங் லிரனும் தலா 6.5 புள்ளிகளோடு சமநிலையில் உள்ளனர். உலக சாம்பியன் யார் என்பதை தீ... மேலும் பார்க்க

Virat Kohli : '5 ஆண்டுகளில் மூன்றே சதங்கள்; கோலியின் டெஸ்ட் கரியர் முடிவுக்கு வருகிறதா?'

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டிக்காக பிரிஸ்பேனில் சுறுசுறுப்பாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் விராட் கோலி. வழக்கத்தை விட அவரது பயிற்சியில் ஒருவித தீவிரம் தெரிவதாக அங்கிருக்கும் பத்திரி... மேலும் பார்க்க