செய்திகள் :

Health: வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து... வீணாகாமல் சாதம் வடிப்பது எப்படி? டயட்டீஷியன் விளக்கம்!

post image

அரிசியின் மேல் பகுதியில்தான் நார்ச்சத்துடன் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துகள் நிறைய இருக்கின்றன என பல மருத்துவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரிசியை எப்படி சமைத்தால், அந்த சத்துகள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை தீர்த்து வைக்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

''வடிப்பதா, குக்கரா..?

பச்சரிசி வெள்ளை வெளேர் என இருப்பதற்கு காரணம், அதை நன்கு பாலீஷ் செய்வதுதான். இப்படி செய்வதால், இதிலிருக்கிற எல்லா சத்துக்களும் போய் விடும். மீதம் இருப்பது வெறும் மாவுச்சத்துதான். அதன்பிறகு இதை குக்கரில் சமைத்தாலும் ஒன்றுதான், கொதி நீரில் போட்டு வடித்தாலும் ஒன்றுதான். ஏனென்றால், அதில்தான் எந்த சத்துகளும் இல்லையே.

Food

புழுங்கல் அரிசியைப் பொறுத்தவரை, இதை புழுக்குவதால் அரிசியின் வெளிப்புறத்தில் இருக்கிற விட்டமின்களும் மினரல்களும் அரிசிக்குள் சென்று விடுகிறது. இந்த அரிசியை வேக வைத்து வடித்து சாப்பிட்டால், இதில் இருக்கிற சத்துகள் கண்டிப்பாக வீணாகும். அதனால், புழுங்கல் அரிசியைப் பொறுத்தவரை குக்கரில் சமைப்பதே சத்துக்கள் வீணாகாமல் இருப்பதற்கான வழி.

'அந்தக் காலத்துல வடிச்சி தானே சாப்பிட்டாங்க' என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அவர்கள் வடித்தக் கஞ்சியை வீணாக்கவில்லை. அதையும் 'நீச்சத்தண்ணி' என்று அருந்தினார்கள். அந்த நீரை தாங்கள் வளர்த்த மாடுகளுக்கும் கொடுத்தார்கள். அந்தளவுக்கு சாதம் வடித்த நீரின் சத்துகளைப்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

களைவதிலும் சத்துக்கள் போகுமா..?

நம் வீடுகளில் அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை களைந்து (நீரில் அலசுதல்), அந்தத் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு சமைக்கிறார்கள். பச்சரிசியை இப்படிக் களைவதால், எதுவும் குறையப் போவதில்லை. ஆனால், புழுங்கல் அரிசியை இப்படிக் களையும்போது, நிச்சயம் சத்துகள் வீணாகும். இதற்கு, அரிசியை சிறிதளவு தண்ணீரில் ஒருமுறை மட்டும் அலசி பயன்படுத்தலாம்.

தாரிணி கிருஷ்ணன்

ஊற வைப்பதால் சத்துகள் வீணாகுமா..?

பச்சரிசியை ஊற வைத்து சமைப்பதால், எந்த சத்து இழப்பும் இல்லை. ஆனால், புழுங்கல் அரிசியை ஊற வைத்து அந்த நீரை வடித்து விட்டு சமைத்தால், சத்துகளை வீணாக சிங்க்கில் ஊற்றுகிறீர்கள் என்று அர்த்தம். இதைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியிருக்கிறது. சிறிதளவு நீரில் அரிசியைக் களைந்து ஊற்றி விட்டு, அரிசி வேக தேவையான தண்ணீரில் அதை ஊற வையுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை வடித்து, உலை நீராகப் பயன்படுத்துங்கள். அதையும் அளவாக வைத்தால், சாதத்தை வடிக்க வேண்டிய அவசியம் வராது. சத்துகளும் வீணாகாது.

அரிசியில் உப்புப் போட்டு வேக வைக்கலாமா?

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 5 கிராம் சோடியம்தான் சாப்பிட வேண்டும். ஆனால், பலரும் 10-லிருந்து 15 கிராம் வரைக்கும் சாப்பிடுகிறார்கள். இதுதான் அதிக ரத்த அழுத்தத்துக்கு முக்கியமான காரணம். குழம்பு, பொரியல், ரசம், தயிர், மோர் என அனைத்திலும் உப்புப் போட்டு தான் சாப்பிடப் போகிறோம் என்பதால், சாதத்தில் உப்புப் போட வேண்டிய அவசியமே இல்லை. அது குக்கரிலும் சமைத்தாலும் சரி, நான் சொன்ன முறைபடி அளவாக தண்ணீர் வைத்து சமைத்தாலும் சரி'' என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

BRICS: ``ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும்'' -பிரதமர் மோடி பேச்சு... நன்றி கூறிய புதின்!

ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது, இந்த போரை நிறுத்த, முடித்து வைப்பதற்கான முன்னெடுப்புகளும், பேச்சுவார்த்தைகளும் அதிகம் நடந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பிரதமர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: எடை குறைவான குழந்தை... பொட்டுக்கடலை மாவுக் கஞ்சி உடல் எடையை அதிகரிக்குமா?

Doctor Vikatan:என்னுடைய 10 வயது மகள் மிகவும் மெலிந்த உடல்வாகுடன் இருக்கிறாள். இந்த வயதுக் குழந்தைகளுக்கு பொட்டுக்கடலை மாவில் கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாமா.... அதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்குமா... ... மேலும் பார்க்க

``காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து!'' -கண்டனங்களுக்குப் பின் வருத்தம் தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி

திமுக இளைஞரணி அலுவலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி, "ராஜாஜி மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார். அவர... மேலும் பார்க்க

``தீபாவளி பண்டிகை நேரத்தில் பாதிப்பை சந்தித்துள்ளோம்..'' - விவசாயிகள் வேதனை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நடவு செய்யப்பட்ட ப... மேலும் பார்க்க

TVK மாநாடு ஏற்பாடுகள் Updates | ராஜ கண்ணப்பன் அரசு நிலத்தை அபகரித்தாரா? | MODI | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* "ஓவர் போதையிலிருந்ததால்..." - போலீசை மிரட்டிய நபர்கள்? #ViralVideo* சென்னை: தீபாவளி 18,000 காவலர்கள் பாதுகாப்பு? * "ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்''... மேலும் பார்க்க

ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா... RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாம் ரயிலில் பயணிக்கும்போது இந்திய ரயில்வேத் துறை சார்பாக தூங்குவதற்கான தலையணையும் போர்வையும் வழங்கப்படும். இதை உபயோகிப்பதில் பலருக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிலர் இவற்றை ஒதுக்கி விட்டு தங்... மேலும் பார்க்க