செய்திகள் :

Hey Ram: `அவமானமாகிடும்னு சொல்லி அழுதேன்; ஆனா கமல்ஹாசன் கேட்கலை...'- நவாசுதீன் சித்திக் ஓப்பன் டாக்

post image
கடந்த 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’.

இந்தப் படத்தில் கமல், ஷாருக் கான், ஹேமா மாலினி, ஸ்ருதி ஹாசன், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக்கும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் இடம்பெற்ற காட்சிகள் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சமீபத்தில் நவாசுதீன் சித்திக் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

ஹே ராம்

‘ஹே ராம்’ படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். என்னை கமல் காப்பாற்றும்படியான காட்சி அது. அவருடன் திரையில் நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஆனால் கடைசி நேரத்தில் நான்  நடித்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது. இந்தப் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு என்னுடைய 5-6 நண்பர்களை படம் பார்க்க அழைத்துச் சென்றிருந்தேன்.

அப்போது கமல் என்னை அழைத்து, நீங்கள் நடித்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது என நண்பர்களிடம் சொல்லிவிடுங்கள் என்றார். ப்ரீமியரில் மட்டுமாவது என் காட்சியை இடம்பெறச் செய்யுங்கள். இல்லாவிட்டால் நண்பர்கள் முன்பு அசிங்கமாகிவிடும் என்று கமலிடம் சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.

நவாசுதீன் சித்திக்

அப்போது என் நண்பர்களிடம் சென்று நான் கண்ணீர்விட்டு அழுதேன். நான் நடித்த சீன் கட் செய்யப்பட்டுவிட்டது என்று அவர்களிடம் கூறினேன். நீங்கள் பார்க்க விரும்பினால் படத்தை பாருங்கள் என்று சொன்னேன்” என்று அந்த சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

FICCI : 'இருவரையும் இந்த விஷயத்தில் மன்னிக்க மாட்டேன்' - கமல், த்ரிஷா `Fireside Chat'

கலந்துகொண்ட 'ஃபயர்சைட் சாட்'கமல்ஹாசன், த்ரிஷாசென்னையில் இன்று மற்றும் நாளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, 'மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு' என்ற கருத்தரங்கை நடத்தி ... மேலும் பார்க்க

What to watch on Theatre: NEEK, Dragon, Get-Set Baby -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Dragon (தமிழ்)Dragonபிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, ... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை - உடல்நிலை குறித்து வழக்கறிஞர் அறிக்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு, மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வர... மேலும் பார்க்க

Shankar : இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை - நடவடிக்கையின் பின்னணி என்ன?

2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகி, அதிக வசூலையும் குவித்தப் படம் 'எந்திரன்'.இந்த 'எந்திரன்' திரைப... மேலும் பார்க்க

NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' - இயக்குநர் தனுஷ் நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 'ராயன்' படத்தை இயக்கியிருந்தார்.தனது இயக்கத்தில் மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி முடித்திருக்... மேலும் பார்க்க