America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பி...
Himanshu Sangwan: `கோலி விக்கெட் எடுக்க ஐடியா கொடுத்த பஸ் டிரைவர்' - சுவாரஸ்யம் பகிர்ந்த ஹிமான்ஷு
ரஞ்சி டிராபியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலியை, வெறும் 6 ரன்களில் ஆஃப் ஸ்டம்ப் பறக்க கிளீன் போல்டாக்கி ஒரேநாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஹிமான்ஷு சங்வான். அந்தப் போட்டி முடிந்த பிறகு, ஹிமான்ஷு சங்வான் கோலியைச் சந்தித்து பந்தில் ஆட்டோகிராஃப் வாங்கியபோது, ``உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல பந்துவீச்சாளர் நீங்கள். உங்களின் எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்." என்று கோலி வாழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில், கோலியை போல்டாக்கிய டெலிவரி குறித்த சுவாரஸ்யத்தை ஹிமான்ஷு சங்வான் பகிர்ந்திருக்கிறார். தனியார் ஊடகத்துடன் பேசிய ஹிமான்ஷு சங்வான், ``விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடப் போவதாக போட்டிக்கு முன் பேச்சுக்கள் அடிபட்டது. அப்போது, இந்தப் போட்டி நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியாது. பின்னர், பண்ட் விளையாடப்போவதில்லை, கோலி களமிறங்கப்போகிறார், போட்டியும் நேரலை செய்யப்படும் என்பது மெதுவாகத் தெரியவந்தது.
ரயில்வேஸ் அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட்டை நான் முன்னெடுத்துச் செல்வதால், `கோலியின் விக்கெட்டை நீங்கள் எடுப்பீர்கள்.' என அணியிலிருந்த ஒவ்வொருவரும் கூறினார்கள். நாங்கள் பயணித்த பேருந்தின் டிரைவர், `நீங்கள் விராட் கோலிக்கு நான்காவது, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்து வீசினால் அவர் அவுட்டாகிவிடுவார்.' என்று என்னிடம் கூறினார்.
எனக்கும் தன்னம்பிக்கை இருந்தது. மற்றவர்களின் பலவீனங்களை விட எனது சொந்த பலத்தில் கவனம் செலுத்த விரும்பினேன். அதன்படி, எனது பலத்துக்கு ஏற்றவாறு பந்துவீசி விக்கெட்டையும் எடுத்தேன். கோலிக்கென்று தனியான பிளான் வைத்திருக்கவில்லை. டெல்லி வீரர்கள் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் என்றும், அதனால் நல்ல லைனில் பந்து வீசுமாறும் பயிற்சியாளர்கள் கூறினர்.
இன்னிங்ஸ் முடிந்ததும், டிரஸ்ஸிங் ரூமுக்கு நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது, கோலி என்னிடம் கைகுலுக்கி, 'மிக நன்றாகப் பந்துவீசினாய்' என்றார். பின்னர், மதிய உணவு இடைவேளையின்போது தங்களுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று அவரிடம் கூறினேன். அதைத்தொடர்ந்து, அவரின் விக்கெட்டை எடுத்த அதே பந்தை எடுத்துக்கொண்டு டெல்லி அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றேன். அவரும், `அதே பந்துதானே' என்று ஜாலியாகக் கேட்டார்." என்று கூறினார்.