செய்திகள் :

ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக வீராங்கனை கமலினி

post image
மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் 143 ரன்கள் எடுத்து அனைவரையும் கவனத்தையும் தன்பக்கம் திருப்பி இருக்கிறார்  தமிழகத்தைச் சேர்ந்த கமலினி.

U 19 உலகக்கோப்பை
U 19 உலகக்கோப்பை

உலகக் கோப்பைத் தொடரில் வென்ற பிறகு பேசிய கமலினி, “என்னுடைய அண்ணனைப் பார்த்துதான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அண்ணன் கூட நிறைய மேட்ச்கெல்லாம் விளையாடச் செல்வேன். அங்கு எல்லோரையும் பார்க்கும்போது உத்வேகமாக இருந்தது. என்னாலும் கிரிக்கெட் விளையாட முடியும் என்று நினைத்தேன்.

என் அப்பாவிடம் கேட்கும்போது அவரும் ஓகே சொல்லிவிட்டார். எனக்கு இடது கையில் பேட்டிங் செய்ய நன்றாக வந்தது. அதனால் என் அப்பா இடது கையிலேயே பேட்டிங் செய் என்றார். அப்போது இருந்துதான் என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கியது. அதன் பிறகு மதுரையில் இருந்து சென்னைக்கு ஷிப்ட் செய்வோம் என்று அப்பா முடிவு செய்தார்.

கமலினி
கமலினி

எங்க அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம். மதுரைக்கும் சென்னைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.        

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Abhishek Sharma: ``என் கரியர் முழுக்க செய்ததை 2 மணிநேரத்தில் செய்துவிட்டார்" - அபிஷேக் குறித்து குக்

டி20 கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் தனது அபார ஆட்டத்தால் இந்திய இளம்படையின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார் அபிஷேக் சர்மா.ஐ.பி.எல்லில் ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட்டுடன் ஓப்பனிங்கில் இறங்... மேலும் பார்க்க

INDvENG: "தோல்வி வருத்தம்தான்; ஆனாலும் T20-யில் நான் பார்த்து வியந்த பேட்டிங்..." - பாராட்டிய பட்லர்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்தத் தொடரின் கடைசிப் போட்டி நேற்று( பிப்ரவரி 1) மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று... மேலும் பார்க்க

``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல" - அஸ்வின் அதிரடி

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆடிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் அடைந்த மோசமான தோல்வி, சீனியர் முதல் ஜூனியர் வரை இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் ரஞ்சி டிராபியில் விளையாடும் கட்டாய நிலைக்குத... மேலும் பார்க்க

Kohli: "உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்" - க்ளீன் போல்டாக்கிய ரஞ்சி வீரரிடம் கோலி கூறியதென்ன?

`மாடர்ன் கிரிக்கெட்டின் ரன் மெஷின்' என்றழைக்கப்படும் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, ஜனவரி 30-ம் தேதியன்று ரயில்வேஸ் அணிக்கெதிரான ரஞ்சி டிராபியில் களமிறங்கினர்.கோலியின் வருகையால் டெ... மேலும் பார்க்க

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்' - இங்கிலாந்து Ex பிரதமர் முன்னிலையில் அதிரடி காட்டிய அபிஷேக்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ... மேலும் பார்க்க

U19 Women's T20 World Cup: மீண்டும் சாம்பியன்... தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடியிருக்கிறது இந்திய மகளிர் அணி.மல... மேலும் பார்க்க