செய்திகள் :

Idly Kadai: "மதுரை துலுக்க நாச்சியார் கோயிலில் மதநல்லிணக்கம்" - நடிகர் பார்த்திபன்

post image

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்ததை அடுத்து, கோவையில் ப்ரீ ரிலீஸ் ரீவண்ட் நடைபெற்றது. இப்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

புத்தம் புது காலை : ஶ்ரீரங்கம் துலுக்க நாச்சியார் கோயிலும், ஈகைத் திருநாள் தியாகமும்!

இதில் பேசியிருக்கும் நடிகர் பார்த்திபன், "இப்படத்துல தனுஷ் சார நான் ரொம்ப ரசிச்சேன். பெரும்பாலும் இயக்குநர்கள் யாரும் அவங்களோட படத்தோட டப்பிங்கிற்கு வர மாட்டங்க. உதவி இயக்குநர்களே பார்த்துக்க சொல்வாங்க.

ஆனால் தனுஷ் இந்தப் படத்துல 'இட்லி கடை'னு எளிமையாக டைட்டில் டிசைன் பண்ணதுல இருந்து, டப்பிங் வரைக்கும் எல்லா வேலையும் கவனமாக பார்த்தார். நானும் இயக்குநர், அதனால இயக்குநர் தனுஷ் சார ரொம்ப பிடிச்சது" என்றார்.

நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன்

ஜாலியான கேள்வி பதிலின்போது 'மதுரை மல்லிகை பூவ யாருக்கு கொடுப்பீங்க'னு கேட்ட கேள்விக்கு நடிகர் பார்த்திபன், "இந்த மதுரை மல்லிகை பூவ சும்மா யாருக்கும் கொடுக்க முடியாது. மதுரை வண்டியூர் அருகே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் துலுக்க நாச்சியார் என்ற அம்மன் இருக்காங்க. அந்த அம்மனுக்கு இந்த மதுரை மல்லியை மாலையாக கோர்த்து படைப்பேன். இஸ்லாமிய இளவரசி, பெருமாள் மீது காதல் கொண்டு துலுக்க நாச்சியார் அம்மனாகியிருக்கிறார். மதுரையின் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு அந்த துலுக்க நாச்சியார் அம்மன்." என்றார்.

துலுக்க நாச்சியார் அம்மன் உருவான கதை

டெல்லி சுல்தானின் தலைமைத் தளபதியான மாலிக் கஃபூரின் முரட்டுத்தனமான தாக்குதலில் பாண்டியர்கள் வீழ்ந்து விட, தனது வெற்றியின் நினைவாக திருவரங்க கோயிலின் கருவூலத்தில் இருந்த உற்சவ மூர்த்தியின் ஐம்பொன் சிலையையும் டெல்லிக்குக் கொண்டு செல்கிறான்.

பெருமாள் மீது காதல் கொண்ட இஸ்லாமிய இளவரசி சுரதானி

டெல்லி அரசவையில் அனைவருக்கும் முன்னால், பாண்டிய நாட்டிலிருந்து தான் கொண்டு வந்த அளவற்ற செல்வத்தை சுல்தானுக்குப் பரிசளிக்கிறான் மாலிக் காஃபூர். அப்போது மாலிக் காஃபூர் கொண்டுவந்த அரங்கன் சிலையும், அதன் முகத்தில் இருந்த வசீகரமான பொலிவும் சுல்தானின் செல்லமகள் சுரதானியை ஈர்க்க, அவள் "வாப்பா... இந்த அழகிய சிலையை நான் வைத்துக் கொள்கிறேன்!" என்று தந்தையிடம் கேட்கிறாள்.

அரங்கனின் சிலை
அரங்கனின் சிலை

தந்தையும் அதற்கு சம்மதிக்க, அரங்கனின் சிலையை எடுத்துக்கொண்ட சுரதானி, அதைத் தன்னுடனேயே தனது அறையில் வைத்துக் கொள்கிறாள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அரங்கனை சிலையாக இல்லாமல் உயிருள்ளதாகவே கருதுகிறாள் சுரதானி. அத்துடன் அரங்கனின் சிலையை நாளும் குளிப்பாட்டி, ஆடையுடுத்தி, மலர்களால் அலங்கரித்து, உணவு சமர்ப்பித்து என ஒவ்வொரு நாளும் விழித்தது முதல் உறங்கும்வரை கிடைக்கும்போது எல்லாம் அரங்கனுடன் நேரம் செலவிட ஆரம்பிக்கிறாள். மெல்ல, தன்னையறியாமல் அரங்கன் மீது காதலும் கொள்கிறாள்.

அரங்கன் சிலை மீட்பு

திருவரங்கத்திலிருந்து அரங்கனை மீட்க வேண்டி, தலைமை பட்டர் குழு மாலிக் கஃபூரிடம் கோரிக்கை வைக்க, அவரும் அரங்கன் சிலையை திருப்பித் தருகிறார். ஆனால், இளவரசி சுரதானி, அரங்கன் சிலையைக் காணவில்லை என பதறியழுகிறாள். சிலையை மீட்டுத்தருமாறு தந்தை சுல்தானைக் கேட்கிறாள். ஆனால் சுல்தான் அதை மறுத்துவிட மனமொடிந்த சுரதானி, உண்ணாமல், உறங்காமல், நோய்வாய்ப்பட்டுபோகிறார்.

துலுக்க நாச்சியார் அம்மன்
துலுக்க நாச்சியார் அம்மன்

இஸ்லாமிய இளவரசி சுரதானிதான் துலுக்கை அம்மனாகப் போற்றப்படுகிறார்.

குதிரையில் பயணித்து திருவரங்கம் வந்துசேர்ந்த சுரதானி, அரங்கன் கோயிலில் உற்சவர் சிலை இல்லாமல் கோயில் மூடியிருப்பதைக் கண்டு, அங்கேயே மயக்கமடைந்து விழுகிறாள். அவள் உடலிலிருந்து ஓர் ஒளி எழுந்து, அரங்கனுடன் சேர்ந்ததைக் கண்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

இந்த இஸ்லாமிய இளவரசி சுரதானிதான் துலுக்கை அம்மனாகப் போற்றப்படுகிறார். முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாது என்பதால் சிலையாய் வைக்காமல், அரங்கன் சந்நிதியிலேயே, அர்ச்சுன மண்டபத்திற்கு எதிராக சுரதானி என்ற துலுக்க நாச்சியாரை, சித்திரமாக வரைந்து சந்நிதியில் வைத்து இப்போதும் வழிபடுகிறார்கள் பக்தர்கள். அவரது பெயரால் மதுரைக்கு வெளியே வண்டியூர் பெருமாள் கோவிலும் இந்த துலுக்க நாச்சியார் அம்மனை வழிபடுகிறார்கள்.

இது கற்பனைக் கதையோ, உண்மையோ தெரியவில்லை. ஆனால், "ஏழைகளுக்கிரங்கும் பெருமாள், ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள், துலுக்க நாச்சியாரோடு பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்" என்று திருவரங்கனைத் தமிழில் துதிக்கும்போதே "கடலுக்குள் பிரிவும் இல்லை… கடவுளில் பேதமும் இல்லை" என்று கண்ணதாசன் சொன்னது சரித்திரம் முழுவதும் உண்மையாகக் காணக் கிடைக்கிறது.

துலுக்க நாச்சியார் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்!

Dhanush: "120 KM தூரம் நடந்தே மதுரைக்கு வந்தாங்க அம்மா; இன்பநிதிக்கு வாழ்த்துகள்"- தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

Idly Kadai: " `என்னை அறிந்தால்'-க்கு அப்புறம் இட்லி கடைல வில்லனா நடிச்சிருக்கேன்" - அருண் விஜய்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

Shwetha Mohan: ``இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன்!" - கலைமாமணி விருது குறித்து ஸ்வேதா மோகன்

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Kalaimamani Award: `கோடான கோடி நன்றிகள்' - கலைமாமணி விருது குறித்து நெகிழும் எஸ்.ஜே. சூர்யா

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: 'அந்த ஈரம் இன்றும் என் மனதில் இருக்கிறது' - இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சி

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, ... மேலும் பார்க்க